தெலங்கானா முதல்வர் கேசிஆர் எங்கே? கேட்டுக்குப் பூட்டு! போராட்டத்தில் மக்கள்!

இந்தியா சற்றுமுன் புகார் பெட்டி
hyderabad protest gate - 2026

சம்ஷாபாதில் கொடூரமான முறையில் படுகொலையான பெண்ணின் குடும்பத்தார் வசிக்கும் கேட்டட் கம்யூனிடி ‘நட்சத்திர வில்லா’ வில் சனிக் கிழமையில் இருந்து பரபரப்பு நிலவுகிறது.

பெரிய அளவில் காலனிவாசிகளும் பிற இடங்களிலிருந்து வந்த பொதுமக்களும் நுழைவுவாயிலில் கொலைக்கு எதிர்ப்பு தெரிவித்து அமர்ந்திருந்தனர். காலனி கேட்டிற்கு உள்ளே இருந்து பூட்டு போட்டு போலீசாரும் அரசியல் தலைவர்களும் அங்கு வர வேண்டாம் என்று போர்ட் வைத்துள்ளார்கள்.

அதுமட்டுமின்றி வில்லாவில் இருந்த போலீசாரை கூட வெளியே அனுப்பிவிட்டார்கள். பொதுமக்கள் அங்கேயே அமர்ந்து கொண்டு அங்கு வசிப்பவர்களை மட்டுமே உள்ளே அனுப்புகிறார்கள்.

இத்தனை பெரிய கொடூரம் நடந்து இருக்கையில் முதல்வர் கேசிஆர் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்று போராட்டக் காரர்கள் கேள்வி எழுப்பினர். அவர் உடனடியாக நடவடிக்கை எடுத்து குற்றவாளிகளை தண்டிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டனர்.

hyderabad protest gate1 - 2026

மீடியாவோ தலைவர்களோ யாரும் விசாரிக்க வரவேண்டாம். நியாயம் வேண்டும் என்று முழக்கம் எழுப்பினர். அதனால் போலீசாருடன் பல தலைவர்களும் உள்ளே அனுமதிக்கப் படாமல் திரும்பிச் சென்றனர்.

சிபிஎம் தலைவர் ஜுலகண்டி ரங்கா ரெட்டி மற்றும் பிற தலைவர்கள் வந்தபோது மக்கள் அவர்களை உள்ளே நுழைய இடம் கொடுக்கவில்லை. அதனால் அவர்களும் போராட்டம் நடத்துபவர்களுக்கு ஒத்துழைப்பு தருவதாக கூறினர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.