சிரஞ்சீவியின் சேவைக்கு சிறப்பு கௌரவம்! ரத்த வங்கிக்கு தேசிய விருது!

Published:

chiranjeevi - 2026

சரியான நேரத்திற்கு ரத்தம் கிடைக்காமல் பலர் உயிரிழக்க நேரிடுகிறது என்ற விவரத்தை செய்தித்தாளில் படித்த சிரஞ்சீவி மிகவும் வருந்தினார். அதற்கு தீர்வு காணும் திசை நோக்கி அடி எடுத்து வைத்தார்.

தன் பிறந்த நாள் கொண்டாட்டங்களில் ஈடுபடும் ரசிகர்களை ரத்த தான முகாம்களை ஏற்பாடு செய்யும்படி அழைப்பு விடுத்தார். 1998 அக்டோபரில் சிரஞ்சீவி ஐ அண்ட் பிளாட் பேங்க் ஏற்படுத்தினார்.

அப்போதிலிருந்து இந்த ரத்த வங்கி தடையின்றி சேவை செய்து வருகிறது. சிரஞ்சீவி ஐ அண்ட் பிளட் பேங்க் மூலம் இதுவரை எத்தனையோ பேர் கண் பார்வை பெற்றுள்ளனர். லட்சக் கணக்கானோர் ஆபத்து நேரத்தில் இலவசமாக ரத்தம் கிடைக்கப் பெற்றுள்ளனர்.

அதுமட்டுமல்ல மக்களிடம் ரத்த தானம் குறித்து உள்ள அறியாமையைப் போக்கவும் முயற்சி செய்தது சிரஞ்சீவி ரத்த வங்கி. அதனால்தான் இந்த ரத்த வங்கிக்கு இப்போது தேசிய அளவில் கௌரவம் கிடைத்துள்ளது. சிறந்த ரத்த வங்கியாக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளது .

chiranjeevi1booddonate - 2026

சிரஞ்சீவி ரத்த வங்கியை மிகச்சிறந்த ரத்த வங்கியாக தில்லியில் உள்ள தேசிய எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டி தேர்வு செய்தது.

ALSO READ:  கம்யூனிஸ்ட்கள் நயவஞ்சகர்கள்; தமிழக அரசை எச்சரிக்கும் இந்து முன்னணி!

நேற்று டிசம்பர் ஒன்றாம் தேதி உலக எய்ட்ஸ் தினம் தொடர்பாக தேசிய எய்ட்ஸ் கண்ட்ரோல் சொசைட்டியும் தெலங்காணா எயிட்ஸ் கன்ட்ரோல் சொசைடியும் இணைந்து சிரஞ்சீவி இரத்த வங்கிக்கு உத்தம ரத்த வங்கி அவார்டை அளித்தன. இந்த அவார்டு வழங்கும் நிகழ்ச்சி ஐதராபாத் ரவீந்திர பாரதியில் நடந்தது.

கடந்த 21 ஆண்டுகளாக தம்மோடு சேர்ந்து மெகா ஸ்டார் சிரஞ்சீவி செய்துள்ள சிறப்பான முயற்சிக்கும் சேவைக்கும் சரியான கௌரவமும் அடையாளமும் கிடைத்ததென்று ‘மெகா ‘ ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

chiranjeevi1 - 2026

உண்மையில் ரசிகர்களின் ஊக்கத்தால்தான் சிரஞ்சீவி இந்த உயர்வை சாதித்தார் என்று கூறவேண்டும். சிரஞ்சீவி பிளட் பேங்க்கிற்கு அவ்வளவுக்கு விளம்பரம் ஏற்படுத்தியது கூட ரசிகர்கள்தாம்.

சிரஞ்சீவியின் ஒவ்வொரு பிறந்த நாளுக்கும் கிராமங்களிலும் நகரங்களிலும் ரத்ததான முகாம்களை ஏற்படுத்தி அந்த ரத்தத்தை சிரஞ்சீவி ரத்த வங்கியில் சேர்க்கிறார்கள் ரசிகர்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img