ஹைதராபாத் என்கவுண்டர்: எனக்கு கைத்தட்டல்கள் தேவையில்லை: சாய்னா பதிலடி!

இந்தியா பொது தகவல்கள் லைஃப் ஸ்டைல்
saina nehwal - 2026

தெலுங்கானாவில் பெண் மருத்துவர் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு எரித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், குற்றவாளிகள் என்கவுண்டரில் சுட்டுக்கொல்லப்பட்டதற்கு பலரும் மகிழ்ச்சி தெரிவித்திருந்தனர்.

அந்த வகையில்,குற்றவாளிகள் 4 பேரும் என்கவுண்டரில் கொல்லப்பட்டதற்காக ஹைதராபாத் காவல்துறைக்கு பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நெவால் பாராட்டு தெரிவித்திருந்தார். இந்த பாராட்டுக்கு எழுத்தாளர்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் சிலர் சாய்னாவை விமர்சித்தனர்.

மேலும், எழுத்தாளரும் , பத்திரிகையாளருமான அன்னா என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், சானியாவை குறிப்பிட்டு, ‘உங்களிடமிருந்து வந்த இந்தக் கருத்தை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளதாகவும், இதற்காக உங்களுக்கு கரகோஷம் கிட்டும் என்பதில் சந்தேகமில்லை.

priyanka - 2026

ஆனால் பெண்களுக்கு முன் உதாரணமாக இருக்கும் நீங்கள் இதன் மூலம் செய்திருக்கும் தீங்கு அளவிட முடியாதது என்றும் கூறியிருந்தார். அதோடு, இதுபோன்ற விவகாரங்களில் கருத்து தெரிவிக்கும் முன் அதனை பற்றி முழுமையாக தெரிந்து கொண்டு கூறுமாறு வேண்டிக்கொள்வதாகவும் பதிவிட்டிருந்தார்.

இந்த பதிவுக்கு தக்கபதிலடி கொடுத்து ட்விட்டரில் சாய்னா நேவால் பதிவிட்டுள்ளார். அதில்,பாதிக்கப்பட்ட பெண் உணர்ந்த கொடுமையை என்னால் நினைத்து கூட பார்க்க முடியவில்லை. குற்றவாளிகள் சுட்டுக் கொள்ளப்பட்டதற்காக நான் மகிழ்ச்சியடைகிறேன். இதில் எனக்கு கைத்தட்டல் தேவையில்லை.

உங்களுடைய கருத்து பாலியல் பலாத்காரம் செய்யும் குற்றவாளிகளின் எண்ணத்தையோ அல்லது சட்டத்தையோ மாற்ற போவதில்லை. பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஒருவேளை துப்பாக்கி இருந்தாலும் நிச்சயம் அவர் அவர்களை சுட்டு கொன்றிருப்பார்’ என்று தெரிவித்துள்ளார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.