தென்மேற்கு பருவமழைக்கு சாதகமான சூழல் இன்னும் மூன்று நாளில் தொடங்கும் , தெற்கு வங்கக் கடல் மற்றும் வடக்கு அந்தமான் கடல் பகுதிகளில் அடுத்த மூன்று நாட்களில் சாதகமான சூழல் தொடங்கும் என்று இந்திய
வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
முன்னதாக, தென்மேற்குப் பருவமழை தொடங்குவதற்கான சாதகமான சூழல் மே 19, 20ஆம் தேதிகளில் நிலவும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்நிலையில், தென்மேற்குப்
பருவமழை தொடங்குவதற்கான சூழல் அடுத்த மூன்று
நாட்களில் தொடங்கும் என கூறியுள்ளது.
மே இறுதியிலேயே பொதுவாக தென்மேற்குப் பருவமழைக்கான சூழல் தொடங்கி விடும் ஆனால் இந்த வருடம், ஜூன் மாதம் முதல் வார இறுதியில் தொடங்கும் என்று கூறியிருந்தது இந்திய வானிலை ஆய்வு மையம்..




