
ஆந்திராவுக்கு மூன்று தலைநகர்கள். ஜெகன் பரபரப்பு பேச்சு. அரசியல் வட்டாரத்தில் பிக் பிரேக்கிங் நியூஸ்.
ஆந்திரப் பிரதேசத்திற்கு மூன்று தலைநகரங்கள் வரலாம் என்று ஏபி முதல்வர் ஜெகன் குறிப்பால் அறிவித்தார்.
விசாகப்பட்டினம் எக்ஸிக்யூடிவ் தலைநகர் , அமராவதி லெஜிஸ்லேடிவ் தலைநகர், கர்னூல் ஜூடிசியல் தலைநகராக வரும் வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தார்.
சட்டப்பேரவை குளிர்கால கூட்டத் தொடரின் இறுதி நாளில் ஆந்திரா தலைநகர் பற்றி முதல்வர் ஜெகன் பரபரப்பு கருத்து தெரிவித்தார்.
அபிவிருத்தியை பரவலாக்குவதற்காக நமக்கு இந்த மூன்று தலைநகர்கள் தேவை என்றார் ஜகன்.
ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒருவேளை மூன்று தலைநகர்கள் ஏற்படும் வாய்ப்புள்ளது என்று குறிப்பிட்டார்.
தென்னாப்பிரிக்காவுக்கு மூன்று தலைநகர்கள் உள்ளன. அதுபோல் முன்னேற்றத்தை பரவலாக்குவது நமக்கும் தேவை என்றார்.
விசாகாவில் எக்சிகியூட்டிவ் தலைநகருக்கு அதிக செலவு பிடிக்காது என்றார்.
நிபுணர் கமிட்டி அறிக்கையை ஆதாரமாகக் கொண்டு ஏபி தலைநகர் பற்றிய முடிவு எடுப்போம் என்று தெரிவித்தார்.

மூன்று தலைநகர்கள் பற்றிய முதல்வர் அறிவித்த குறிப்பு அரசியல் வட்டாரத்தில் பரபரப்பு செய்தியாக மாறியது.
சந்திரபாபு அமராவதியை தலைநகராக்க வேண்டுமென்று முன்பாகவே தீர்மானித்து தன் பினாமிகளைக் கொண்டு பூமிகளை வாங்க செய்தார் என்று குற்றம் சாட்டினார். அதன்பின் அமராவதியை தலைநகராக அறிவித்தார்.
அமராவதியில் தலைநகர் நிர்மாணத்திற்கு அடிப்படை வசதிகள் ஏற்படுத்த 53 ஆயிரம் ஏக்கர்களுக்கு ஒரு லட்சத்து 9 ஆயிரம் கோடி ரூபாய் தேவை என்று சந்திரபாபு நாயுடுவே கூறியிருந்தார். இதற்கு வட்டி எத்தனை ஆகுமோ தெரியாது என்று ஜெகன் தெரிவித்தார்.
இந்த ஐந்தாண்டுகளில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த சந்திரபாபு ரூபாய் 5800 கோடி மட்டுமே செலவழித்தார் என்று ஜெகன் கூறினார்.
பாண்டு பத்திரங்களை அடகுவைத்து வங்கிகளிலிருந்து இதற்காக கடன் வாங்கியுள்ளார் என்றார். இதன்மீது வட்டி ஆண்டுக்கு 700 கோடி ரூபாய் கட்டுகிறோம் என்றார்.



