கிரிக்கெட் விளையாடணும்னு போய்… உயிரை இழந்த சிறுவர்கள்!

Published:

sand lorries - 2026

கிரிக்கெட் விளையாடுவதற்கு சென்று உயிர் இழந்த சிறுவர்கள்.ஹைதராபாதில் உப்பல் பகாயத் வென்ச்சர் அருகில் இந்த சோக நிகழ்வு நேர்ந்தது.

கிரிக்கெட் விளையாடுவதற்காக சென்ற இரு சிறுவர்கள் பில்டிங் கட்டுவதற்காக தோண்டிய செல்லார் குழியில் கவனிக்காமல் விழுந்து மரணமடைந்தார்கள். விடுமுறை தினங்களில் விளையாட்டாக கிரிக்கெட் ஆட்டத்திற்கு சென்ற இரு சிறுவர்களை சடலங்களாக மீட்கப் பட்டனர்.

ஹைதராபாத்தில் உப்பல் என்னுமிடத்தில் ஞாயிறன்று டிசம்பர் 29 மத்தியானம் இந்த சோக நிகழ்வு நேர்ந்தது. ரேவந்த் 12, சிண்ட்டு 11 என்ற இரு சிறுவர்கள் இன்னும் பிற சிறுவர்களோடு சேர்ந்து கிரிக்கெட் விளையாடுவதற்காக பகாயத் வென்சர் அருகிலிருந்த மைதானத்திற்கு சென்றார்கள்.

சிறுவர்கள் கிரிக்கெட் விளையாடுகையில் பந்து அங்கிருந்த கட்டட நிர்மாணத்திற்காக தோண்டிய குழியில் விழுந்துள்ளது. அந்தப் பந்தைத் தேடிச் சென்ற இருவரும் குழியில் தேங்கியிருந்த நீரில் மூழ்கி இறந்து போனார்கள்.

விவரம் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சோதனை மேற்கொண்டனர். சம்பவம் பற்றி வழக்குப்பதிவு செய்து, உடல்களை போஸ்ட் மார்ட்டத்திற்காக காந்தி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர்.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

சிறுவர்களின் மரணத்தால் பெற்றோரும் உற்றாரும் சோகத்தில் ஆழ்ந்தனர் . சம்பவம் குறித்து முழுமையான விசாரணையை போலீஸார் மேற்கொண்டுள்ளனர்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img