பாஜக., தொடங்கியது… ‘மிஸ்ட் கால்’ பிரசாரம்! குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு திரட்டுகிறது!

Published:

missedcall nrc - 2026

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு ஆதரவாக பிரசாரக் களத்தில் இறங்கியிருக்கிறது பாஜக.,! பொதுமக்கள் குடியுரிமை சட்டத்துக்கு ஆதரவு தெரிவிக்க, மிஸ்டுகால் கொடுப்பதற்காக
88662 88662 என்ற எண்ணை அறிவித்துள்ளது பாஜக!

இந்த எண்ணில் தொடர்பு கொண்டு, குடியுரிமை சட்டத் திருத்தத்துக்கு பலரும் தங்களது ஆதரவை தெரிவித்து வருகின்றனர்.

மிஸ்ட் கால் மூலம் உறுப்பினர்களைச் சேர்ந்து தொடக்கத்தில் புரட்சி செய்த பாஜக., தற்போது, எதிர்க்கட்சிகளின் பிரசாரங்களை முறியடிக்கும் வகையில், உண்மையான தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்க்கும் பணியில் இறங்கியுள்ளது. இதற்காக பொறுப்பாளர்களை நியமித்து, சமூக வலைத்தளங்களில் பிரசாரங்களை முன்னெடுத்துள்ளது.

அதன் ஒரு பகுதியாக, பொதுமக்கள் மிஸ்ட் கால் மூலம் தங்களது ஆதரவைத் தெரிவிக்க வசதியாக 8866288662 என்ற எண்ணினை அறிவித்துள்ளது பாஜக.

ALSO READ:  முழுமையான நன்மைக்கு சனாதன தர்மம்!

Related articles

Recent articles

spot_img