விசாகப்பட்டினம் அரக்கு பள்ளத்தாக்கு சுற்றுலா! குறைந்த செலவில்!

Published:

vizhag3 - 2026

விசாகப்பட்டணம், அரக்கு பள்ளத்தாக்கு டூர் குறைந்த விலைக்கே! ஐஆர்சிடிசி லிருந்து ஸ்பெஷல் பேக்கேஜ்.

ஐஆர்சிடிசி விசாகப்பட்டினம் டூர் பேக்கேஜ் புக் செய்பவர்களுக்கு விசாகப்பட்டினத்தில் இருக்கும் சுற்றுலா இடங்களோடு கூட அரக்கு பள்ளத்தாக்கும் அழைத்துச் செல்வார்கள்.

இந்த பேக்கேஜ் 2020 ஜனவரி 1 முதல் ஆரம்பம் ஆரம்பமானது. 2020 மார்ச் 29 வரை அரக்கு பள்ளத்தாக்கு பேக்கேஜ் நடைமுறையில் இருக்கும்.

குளிர் நாளில் அரக்கு பள்ளத்தாக்கின் அழகை ரசித்து பார்ப்பதற்கு செல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? இரண்டு நாட்கள் பிரசாந்தமாக நாளை கழிக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறீர்களா? அப்படியானால் உங்களுக்கு ஒரு நல்ல செய்தி !

அரக்கு பள்ளத்தாக்கு பார்க்க வேண்டுமென்று விரும்புபவர்களுக்கு டூர் பேக்கேஜ் கிடைக்க செய்துள்ளது இந்தியன் ரைல்வே கேடரிங் அண்ட் டூரிஸம் கார்ப்பரேஷன் ஐஆர்சிடிசி.

vizhag2 - 2026

விசாகப்பட்டினத்தில் இருந்து இந்த டூர் தொடங்குகிறது. இரண்டு இரவுகள் மூன்று பகல்கள் டூர் பாக்கேஜ் கொண்டது இது.
மூவர் ஆகுபன்ஸி சார்ஜ் 6215 ரூபாய். டபுள் ஆகுபன்சி ரூபாய் 8580. சிங்கிள் ஆகுபன்சி ரூபாய் 15,665.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,

விசாகப்பட்டினத்தில் ஏறிக்கொள்வதும் பிக்கப், இறங்குவதும் ட்ராப் இரண்டும் இருக்கும்.

இரண்டு இரவுகள் விசாகப்பட்டினத்தில் தங்க வேண்டியிருக்கும். பிரேக்ஃபேஸ்ட் டின்னர் ஏசி வாகனத்தில் சைட்சீயிங் டிராவல் இன்ஷூரன்ஸ் போன்றவை இந்த பேக்கேஜில் கவர் ஆகின்றன.

இந்த பேக்கேஜ் புக் செய்து கொள்ளும் டூரிஸ்ட் களை விசாகப்பட்டினத்தில் இருக்கும் சுற்றுலா இடங்களோடு கூட அரக்கு பள்ளத்தாக்குக்கும் அழைத்துச் செல்வார்கள்.

இந்த பேக்கேஜ் 2020 ஜனவரி 1 முதல் தொடங்கியது. 2020 மார்ச் 29 வரை அரக்கு டூர் அமலிலிருக்கும்.

ஐஆர்சிடிசி விசாகப்பட்டினம் அரக்கு டூர் பேக்கேஜ் தினந்தோறும் இருக்கும்.

முதல் நாள் விசாகப்பட்டினம் ஏர்போர்ட் ரயில்வே ஸ்டேஷன் பஸ்ஸ்டாண்டில் டூரிஸ்ட் களை பிக்கப் செய்து கொள்வார்கள் ஹோட்டலில் செக்இன் ஆனபின் தொட்டாகொண்டா புத்திஸ்ட் காம்ப்ளக்ஸ், கைலாசகிரி, ருஷிகொண்டா பீச், ராமாநாயுடு பிலிம் ஸ்டுடியோ, சப்மரீன் மியூசியம், ஷிப்பிங் ஹார்பர் போன்ற இடங்களுக்கு அழைத்துச் செல்வார்கள். இரவு விசாகப்பட்டினத்தில் தங்கவேண்டும். இரண்டாம் நாள் காலை அரக்கு பள்ளத்தாக்கு அழைத்துச் செல்வார்கள். பத்மாபுரம் கார்டன்ஸ், ட்ரைபல் மியூசியம், அனந்தகிரி காபி பிளாண்டேஷன், காலிகொண்டா வியூ பாயின்ட், பொர்ரா குகைகள் பார்த்தபின் மாலை விசாகப்பட்ணம் திரும்பி வரவேண்டும். இரவு விசாகாவில் தங்கவேண்டும். மூன்றாம் நாள் காலை ப்ரேக்ஃபாஸ்ட் ஆனபின் விசாகப்பட்டினம் ஏர்போர்ட், ரயில்வே ஸ்டேஷன், பஸ் ஸ்டாண்டுகளில் டிராப் செய்வார்கள். இதோடு இந்த டூர் நிறைவுபெறும்.

ALSO READ:  குடிமக்களே தெய்வங்கள்: 80வது சுதந்திர தின உரையில் பிரதமர் மோடி உருக்கம்!
vizhag1 - 2026

இந்த பேக்கேஜ் தொடர்பான விவரங்களை ஐஆர்சிடிசி டூரிசம் சைட்டில் பார்த்து அறிந்து கொள்ள முடியும்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img