spot_img
spot_img

சற்று முன் :

சினிமா :

ஆன்மிகம்:

― Advertisement ―

To Read this news article in other Bharathiya Languages

Homeஇந்தியாதந்தை - கிணறு -7 மகள்கள்! இந்தியாவுக்கு சிஏஏ ஏன் தேவை தெரியுமா?!

தந்தை – கிணறு -7 மகள்கள்! இந்தியாவுக்கு சிஏஏ ஏன் தேவை தெரியுமா?!

- Advertisement -

இதனை ஆங்கிலத்தில் எழுதியவர்: டாக்டர் வாஷி ஷர்மா, IITB யில் படித்தவர், IITK வில் – Energy Science, Defence, Religions, Pakistan ஆசிரியராய் பணியாற்றியவர்.

Twitter – @VashiMant
————————————————
என் முன்னுரை என,.. எதுவும் இல்லை! நிற்காமல் பெருகும் கண்ணீரை தவிர! ஐஐடி செமஸ்டர் முடிவில்,..

என்னுடைய சீனியர் ஒருவருடன் விமானத்தில் பயணித்தேன். அவர் ஒரு “மலாங்” – அதாவது உலக கருத்துக்களைப் பற்றி கவலைப்படாமல், தன் வழியில் மத கோட்பாடுகளை பின்பற்றி வாழ்பவர்!

“உலகத்துல,.. பணம்தான் எல்லாமும்!” என்றேன்!

அவர்: “அப்போ, நீங்க குஜ்ரன்வாலா (இந்திய எல்லையிலிருந்து 50-60 கிமீ தொலைவில் உள்ள ஒரு பாகிஸ்தான் நகரம்!) வுல இருக்கிறப்ப, உங்க கிட்டதான் ஏகப்பட்ட பணம் இருந்ததே! பின், ஏன் இந்தியாவுக்கு ஓடி வந்தீங்க? தவிர, அமிர்தசரஸ் லேர்ந்து இன்னமும் ஒரு 40 வருடம் கழித்து,.. மீண்டும் நீங்க அதே போல ஓட மாட்டீங்க, ங்கிறதுக்கு என்ன உத்திரவாதம்?”

எனக்கு கோபம், வெறியாய் ஏறியது!
ஆனால், அவர் என்ன சொல்கிறார் என்று புரியவில்லை!
————————————————
அடுத்த வாரம், ஓர் இரவு, அமிர்தசரஸ் க்கு ரயிலில் பயணித்தேன் – செமஸ்டர் விடுமுறைக்கு, என் வீட்டுக்கு.

அந்த மலாங் ரயில்வே ஸ்டேஷனுக்கு வழியனுப்ப வந்தார்.

“உனக்கு,… வாழ்க்கையில் தேவையான எல்லாமும் கிடைச்சிருக்கு! ஆனா, உங்க தாத்தாவை போய் கேளு – பணம்,.. அவரோட குடும்பத்தை காப்பாத்த முடிஞ்சுதா ன்னு!”

ட்ரெயின் வந்தது. ஏறினேன். மலாங் கிளம்பினார். நான் அதிர்ச்சியில் உறைந்திருந்தேன்! எனக்கு தெரியாத என்ன விஷயம், என் தாத்தாவை பற்றி இவருக்கு தெரிந்திருக்கும்?

ட்ரெயின் நகர ஆரம்பித்தது.
————————————————
மறுநாள், எங்கள் பெரிய, அழகிய பங்களா வில் இருந்தேன். தொழில் அழுத்தத்தை மீறி, எங்களை மிகவும் நேசிக்கும் பெற்றோர்!

“நாளை,.. (ஜலந்தரில் இருக்கும்) தாத்தாவை போய் பார்க்கணும்!” என்றேன் அம்மாவிடம்.

“என்னப்பா ஆச்சு? எங்க கூட கொஞ்ச நாள் இருக்க கூடாதா? நாம எல்லாருமே போயி அவரை பார்ப்போம்! அவருக்கு உடம்பு சரியில்லாம இருக்கு!”
————————————————
ஆனால், மறுநாள், நான் ஜலந்தரில் இருந்தேன்.

“தாத்தா,.. 1947ல என்ன ஆச்சு?”

“ஒண்ணும் ஆகலப்பா,..! ஆமா,.. என்ன திடீருன்னு கேக்கிற?”

“உங்க கூட பிறந்தவுங்கள்ளாம், இப்போ எங்கே?”

“எனக்கு கூடப்பிறந்தவுங்க யாரும் இல்லைப்பா! நான், ஒரே பிள்ளை !”

“அது எப்பிடி தாத்தா? உங்க காலத்துல,.. சாதாரணமா, 10-12 குழந்தைங்க பெத்துக்குவாங்களே? அப்போ, ஏன், உங்க அப்பாம்மா மட்டும், ஒரே பிள்ளையோட நிறுத்தினாங்க?

“ஹஹ்ஹா,.. அவங்க நல்லா பிளான் பண்ணி வாழறவுங்க ப்பா! இப்போ,.. நீ போயி ரெஸ்ட் எடுத்துக்கோ!”
————————————————
மறுநாள்,.. என் ரூம்ல,.. வீடியோ கேம் விளையாடிக் கொண்டிருந்தேன்.

தாத்தா, மெள்ள வந்து, என் அருகில் அமர்ந்தார்.

“கான்ட்ரா கேம் விளையாடுறியா?”

“ஆமா, தாத்தா!”

“நீ, சூரிய ஒளியில, 7 வர்ணங்களை எப்பவாவது பார்த்திருக்கியா?”

“இல்லை தாத்தா!”

“வா,.. உனக்கு காட்றேன். மாடிக்கு போகலாம் வா!”

இருவரும், மாடிக்கு போனோம். அழகான மாலை வெய்யில்! சூரியன் மறையும் தருணம்!

“அந்திச் சிவப்பு தெரியுதா?”

“ஆமா தாத்தா,.. வானம் முழுதும்…!”

“இந்த அந்திச்சிவப்பில், 7 வர்ணங்கள் இருக்கு. ஆனா,.. இதெல்லாம், இன்னும் கொஞ்ச நேரத்துல காணாம போயிடும். வெறும் இருட்டுதான் மிஞ்சும்.”

“அது, இயற்கை தானே தாத்தா! ஒவ்வொரு சாயந்திரமும் நடக்கிறதுதானே!”

“ம்ம்ம்… அதே மாதிரி ஒரு விஷயம் நூறு வருஷத்துக்கு ஒருதடவை நடக்கிறதும் உண்டு! நான், இந்த ஏழு நிறத்துக்கு பேரு கூட வச்சிருக்கேன்! – லஜ்ஜோ, ரஜ்ஜோ, பாக்கோ, பாரோ, காயோ, இஷோ, அப்புறம் ஊர்மி ன்னு?”

“ஏன், தாத்தா?”

“அந்த காலத்துல, குஜ்ரன்வாலா ங்கிற ஊருல, ஒரு பணக்கார பண்ணையார் இருந்தாரு! பேரு பல்வந்த் காத்ரி! அந்த ஊருல அதிக நிலம் வச்சிருக்கிறவங்கள்ல அவரும் ஒருத்தரு! பெரிய பணக்காரர். அவருக்கு 7 மகள்கள்,.. ஒரு மகன். அவரு மனைவி பேரு பிரபாவதி தேவி,…”
————————————————
பல்தேவ் (மகன்) – 20
லஜ்வந்தி – 19
ராஜ்வதி – 17
பாக்வதி – 16
பார்வதி – 15
காயத்ரி – 13
ஈஷ்வரி – 11
ஊர்மிளா – 9

அது ஒரு அழகிய குடும்பம். ஒரு பணக்கார, பஞ்சாபி காத்ரி குடும்பம்.
அவர்கள் அப்போது, லஜ்ஜோ, ரஜ்ஜோ இருவருக்கும் தகுந்த மணமகன்களை தேடிக்கொண்டிருந்தார்கள்.

ஆனால்,…

அன்றைய பஞ்சாபில்,.. ஏதோ ஒன்று சரியில்லாமல் இருந்தது.
————————————————
அப்போது,..

பாரிஸ்டர் (முகம்மது அலி) ஜின்னா, பாகிஸ்தானை உருவாக்க, “நேரடி நடவடிக்கை தினம்” (Direct Action Day) என ஒன்றை அறிவித்திருந்தார்! பெரிய கலவரம் நிகழ,.. இஸ்லாமியர் அல்லாதவர்கள் தாக்கப்பட வாய்ப்புண்டு என, வாய்வழி எச்சரிக்கைகள் வந்த வண்ணம் இருந்தன.!

ஆனால், காந்தியின் கொள்கைகளை, சிலபல துஷ்டர்களால் தோற்கடிக்க இயலாது, என்று ஹிந்துக்களும், சீக்கியர்களும், தீவிரமாய் நம்பினர் !

எப்படி இயலும்?? ஹிந்துக்களும், சீக்கியர்களும் தான், இஸ்லாமிய சுஃபி க்களின் மஜார் களுக்கு போய் வழிபடுகின்றனரே! முகலாயர் காலத்து இஸ்லாமிய சுஃபி கவிஞர் பாபா புல்லே ஷா அவர்களின் பாடல்களை மற்றும், “அல்லா ஒளியை உருவாக்கினான்,..” என்பது போன்ற பாடல்களை எல்லாம் பாடுகின்றனரே! பின், எதற்கு மனதில் சஞ்சலப்பட வேண்டும்? என்ன அடிப்படையில்?

தவிர,… குஜ்ரன்வாலா நகரம் முழுவதும், ஜாட் கள், குஜ்ஜார் கள், மற்றும் ராஜபுத்திர இஸ்லாமியர்கள் நிறைந்துள்ளனரே! எப்படி, எதற்காக கவலை கொள்ள வேண்டும்?!

இஸ்லாமியர்கள்,.. தங்களின் ரத்த-சம்பந்தம் போலுள்ள, சக மற்ற மதத்தினரை துன்புறுத்துவார்கள், என கற்பனையிலும் எண்ண முடியவில்லையே!

சேச்சே,… வாய்வழி பயமுறுத்தல் செய்திகளில், உண்மை எதுவும் இருக்காது!
இருக்க வாய்ப்பில்லை! எப்படி இயலும்! சாத்தியமே இல்லை!
————————————————
ஆனால்,…

அருகிலிருந்த பகுதிகளிலிருந்து,.. ஹிந்துக்களும் சீக்கியர்களும் நூற்றுக்கணக்கில் கொல்லப்படும் செய்திகள் வர ஆரம்பித்தன!

“அல்லாஹு அக்பர்”,.. “பாகிஸ்தான் என்றால், அல்லாவை தவிர வேறு எந்த கடவுளும் இல்லை!” என ஓங்கி ஒலித்த இஸ்லாமியர்களின் குரல்கள் கேட்க ஆரம்பித்தன!

அதே கும்பல்கள்,.. கூடவே,..

“எந்த ஒரு காஃபிர் (இஸ்லாமை ஏற்றுக் கொள்ளாதவர்கள்!) பெண்ணும் இந்தியாவுக்கு போக முடியாது,.. நாங்கள், அந்த பெண்களை சொந்தமாக்கிக் கொண்டு விடுவோம்!”

என உரத்த குரலில் திரும்பத்திரும்ப அறைகூவல் விடுவதும், கேட்க ஆரம்பித்தது!
————————————————
1947ம் வருடம், செப்டம்பர் 18ம் தேதி காலை நேரம்!

ஒரு சீக்கிய தபால்காரர், அழையாமலே, எங்கள் பண்ணை க்குள் வேகமாக மூச்சிரைக்க ஓடிவந்து,..

“லாலா ஜி,.. இந்த இடத்தை விட்டு ஓடி விடுங்கள்! அவர்கள்,.. உங்கள் மகள் களை சூறையாட வந்து கொண்டிருக்கிறார்கள்!” என்று அலற ஆரம்பித்தார்!

“லஜ்ஜோ வை, சலீமும்,.. ரஜ்ஜோ வை, ஷேக் முகம்மது வும், தூக்கிக் கொண்டு போக வந்து கொண்டிருக்கிறார்கள்! தவிர,.. பாக்வதி யை,…”

அடுத்த வார்த்தையை அவன் பேசும் முன்,.. லாலா பால்வந்த்,.. அவனை ஓங்கி அறைந்தார்!

“என்ன முட்டாள்தனமான பேச்சு பேசுகிறான் இவன்!? என்ன பிதற்றல் இது? சலீம்,.. முக்தர் பாய் அவர்களின் மகன்! முக்தர் பாய், எங்கள் குடும்பத்தில் ஒருவர் போல! என்ன பேச்சு பேசுகிறான் இவன்! “

அடியின் வலி பற்றி எல்லாம் கவலைப்படாத அவன்,.. “லாலா ஜி,.. முக்தர் பாய் தான் அந்த கும்பலையே அழைத்து வருகிறார்! எல்லா ஹிந்து-சீக்கியர்களும் இந்தியாவுக்கு தப்பி ஓடிக்கொண்டிருக்கின்றனர்! ஒரு 300-400 பேரா சேர்ந்து, கும்பல் கும்பலா போறாங்க! நீங்களும் உங்க குடும்பத்துடன், எவ்வளவு சீக்கிரம் முடியுமோ அவ்வளவு சீக்கிரம் நகர குருத்வாராவுக்குள்ள ஓடி புகுந்துக்குங்க!” என்று கத்தியபடி,.. ஓடி மறைந்தான்!

ஏழு மாத கர்ப்பிணி மனைவி பிரபாவதி யிடம் ஓடினார் லாலா ஜி! எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த அவள்,.. அழுது கொண்டிருந்தாள்!

பிரபாவதி: “நாம உடனே போகணும், லாலா ஜி!”

பல்வந்த்: “நாம எங்கயும் போகப்போறது இல்ல! அந்த போஸ்ட்மேன் பொய் சொல்றான்! முக்தர் பாய் அந்த மாதிரி எல்லாம் செய்ய வாய்ப்பே இல்லை! காந்தி யோட எண்ணங்கள், கொள்கைகள் பொய்யாக வாய்ப்பே இல்லை!”

பிரபாவதி: “காந்தி யோட எண்ணங்கள் பத்தி பேசற நேரம் இது இல்லை. நாம உடனே போகணும். நம்ம மகள்களை நகைகளையும், டாகுமெண்ட் களையும், பேக்கிங் பண்ண சொல்லிட்டேன்!”

பல்வந்த்: “ஆனா,.. முக்தர் பாய்?,… அவரோட நான் பேசணும்!”

பிரபாவதி: “அவரு போன மாசமே வந்தாரு,.. நீங்க அப்போ வீட்ல இல்ல! சலீம் க்கு லஜ்ஜோ வை பிடிக்குமாம்,.. கல்யாணம் பண்ணிக்கணும் ன்னு கேக்கிறான் ன்னாரு! லஜ்ஜோ சொல்றா,.. சலீம் அவன் ஃப்ரெண்ட்ஸ் கூட சேர்ந்துக்கிட்டு, இவளை தினமும் தொந்தரவு செய்யறானாம்! அதனால,.. அவ, வீட்டை விட்டு வெளியில போறதையே நிறுத்திட்டா!”

பல்வந்த்: “நீ ஏன், இதை எல்லாம் என் கிட்ட சொல்லல? நான் முக்தர் பாய் கிட்ட பேசியிருப்பேன்ல்ல?”

பிரபாவதி: “நீங்க ரொம்ப அப்பாவி! அந்த முக்தர் பாயே லஜ்ஜோ வை, சலீம் க்கு கட்டி வைக்கணும் ன்னார்! இப்ப,.. வலுக்கட்டாயமா லஜ்ஜோவை தூக்கிட்டு போக வராரு! நாம,.. போயிடுவோம்!”
————————————————
நகர குருத்வாரா,.. ஹிந்து-சீக்கியர்களால் நிரம்பி வழிந்தது!

ஆண்கள்,.. வாள், வேல் கைகளில் ஏந்தி, குருத்வாராவின் எல்லைகளை காவல் காத்தனர்!

குஜ்ரன்வாலா நகரம், மல்யுத்த வீரர்களுக்கு பெயர்போனது!
வாட்டசாட்டமான ஹிந்து-சீக்கிய மல்யுத்த வீரர்கள் குருத்வாராவின் பிரதான வாசல்களில் காவலுக்கு நிறுத்தப்பட்டனர்! பலர்,.. கோவிலின் மொட்டை மாடியில் இருந்து கண்காணித்தனர் ! பலர், தங்களின் வாள்களை தீட்டிக்கொண்டிருந்தனர்!

பெண்கள், சிறுமிகள், குழந்தைகள்,.. மிரண்டு போயிருந்தனர்! தாய்மார்கள், தங்கள் குழந்தைகளை நெருக்கமாய் இறுக்கி அணைத்தனர்!

திடீரென,.. ஒரு பெரிய கோஷம்,.. அந்த மரண அமைதியை கலைத்தது! அந்த கூக்குரல், அருகிலிருந்த பாடி மசூதியிலிருந்தது ஒலித்தது! ஆயிரக்கணக்கான இஸ்லாமியர்களின் உரத்த கூக்குரல் ஒலிக்க ஆரம்பித்தது:

“பாகிஸ்தான் என்றால், அல்லாவை தவிர வேறு எந்த கடவுளும் இல்லை!”

“நாங்கள் சிரித்துக்கொண்டே பாகிஸ்தானை பெற்று விட்டோம்!! ஆனால் ரத்தத்தால், இந்தியாவை அடைவோம்!”

“காஃபிர் களே,.. உங்களை எப்படி எல்லாம் வெட்டிக் கூறுபோட்டு, நாசம் செய்யப் போகிறோம் என்பதை பாருங்கள்!”

“(இங்கே, இனிமேல்) ஒரு கோவிலும் இருக்க முடியாது! ஒரு கோவில் மணியும் ஒலிக்க முடியாது!”

“ஹிந்துப் பெண்கள், எங்கள் படுக்கைக்கு! ஹிந்து ஆண்கள், சுடுகாட்டுக்கு!”
————————————————
பிரபாவதி,.. ஜன்னல் அருகே, தன் 7 மகள்கள் சூழ உட்கார்ந்திருந்தாள்! அவளுடைய ஒரே மகன், வெளிவாசலை காவல் காத்துக் கொண்டிருந்தான்.

திடீரென, மசூதியில் கத்திக்கொண்டிருந்த கும்பல், எதோ காரணத்தால்,.. சட்டென மௌனமானது!

ஒரு நிமிடம் கழித்து,.. “லா இலாஹ் இல்லல்லாஹ் …” எனும் கூக்குரல் ,.. மிக அருகில் கேட்க ஆரம்பித்தது! இன்னமும் இன்னமும் நெருங்கி வர ஆரம்பித்தது!

வீச்சுவாள், குத்துவாள், வேல், சங்கிலிகள் என பலவித ஆயுதங்களுடன், அந்த கும்பல் குருத்வாராவை நெருங்கியது! அதை முலில் கண்டது,.. ப்ரபாவதி! ஜன்னலின் வழியாக!

“அவங்க வந்துட்டாங்க,..!” என்று அலறினாள்!

பயத்தின் மிரட்சியில் உறைந்த அவள், தன் குழந்தைகளை,.. இறுக்கி அணைத்தாள்!
————————————————
குருத்வாரா வின் கதவுகள், உள்ளிருந்து தாளிடப்பட்டிருந்தன! சுவற்றுக்கும் கதவுகளுக்கும் அருகே நின்றபடி,.. ஆண்கள் சண்டைக்கு தயாராயினர்!

அவர்களை,.. ஒரு அறிவிப்பை கேட்கும்படி குரல் வந்தது! சுக்தேவ் ஷர்மா எனும் மல்யுத்த வீரர் (அவர் கோவில் பூசாரியும் கூட) எழுந்து நின்று பேசினார்:

“அவர்கள்,.. நம் தாய்கள், சகோதரிகள், மனைவிகள், மகள்களை குறிவைத்து வருகிறார்கள்! அவர்களின் வாள்கள், நம் கழுத்தை குறிவைத்து! அவர்கள் நம்மை, அடிபணிந்து, அவர்கள் மதத்துக்கு மாறச் சொல்வார்கள்! நான் முடிவு செய்துவிட்டேன்: நாம் அடிபணிய மாட்டோம்! இஸ்லாத்துக்கு மதம் மாற மாட்டோம்! தவிர,.. அவர்கள் நம் பெண்களை தொடக்கூட அனுமதிக்க மாட்டேன்!”

அங்கு மயான அமைதி நிலவியது!

பின் அனைத்து, ஹிந்து-சீக்கியர்களும் உரத்த குரலில் முழங்கினர்: “நாம் யாரும் நம் முன்னோர்களின் தர்மத்தை விட்டு விலக மாட்டோம்,! நம் வாளை,.. அவர்கள் ருசி பார்க்கட்டும்!”
————————————————
வெறிபிடித்த இஸ்லாமியர்கள் கும்பல், அந்த குருத்வாரா வுக்குள் நுழைந்தது!

முதலில்,. ஒரு 50 – 60 பேர் மட்டும்!

குருத்வாரா வுக்குள் காத்துக் கொண்டிருந்த ஹிந்து-சீக்கிய வீரர்கள், அனாயாசமாக அவர்களை வெட்டி வீழ்த்தினர்! தங்கள் பக்கம் எந்த உயிர்ச் சேதமும் இல்லாமல்!

பெண்களும் குழந்தைகளும் நிறைந்த ஹால்,.. உட்புறம் தாழிடப்பட்டிருந்தது!
————————————————
“லா இலாஹ் இல்லல்லாஹ் …” என கத்திக் கொண்டிருந்த அந்த கும்பல், குருத்வாராவுக்கு 150 அடி தொலைவில், ஒரு அரை மணி நேரம் நின்றது.! அவர்கள் எதற்கோ காத்துக் கொண்டிருந்ததாக, தோன்றியது!

பின்,.. அது நிகழ்ந்தது!

இம்முறை,.. ஆயிரக்கணக்கில், வந்தனர்! அலை அலையாக !

ஆனால்,.. குருத்வாரா உள்ளே மொத்தமே 400 பேர் கூட இருக்க மாட்டார்கள்! அதிலும் கூட இளவயது ஆண்கள் வெறும் 50-60 பேர்தான் இருந்தார்கள் ! மீதி, வயதானவர்கள், பெண்கள், குழந்தைகள்!!

இது, இறுதிப் போராகவே இருந்தாக வேண்டும்.!
————————————————
அந்த இஸ்லாமியர் கும்பல்,..

அப்போதுதான், ஒரு வீட்டிலிருந்து கடத்திக் கொண்டுவந்த ஒரு சீக்கிய பெண்ணை, குருத்வாராவில் இருந்தவர்கள் நன்கு பார்க்கும்படி,.. தரதர வென இழுத்து கிடாசினர்!

அவள் ஆடைகள் முழுவதும் கிழித்து எறியப்பட்டு, நிர்வாணமாய் இருந்தாள்! அவளை சுற்றிச் சுற்றி வந்து, அவளின் அந்தரங்க பாகங்களை தொட்டு, தடவி, அவை பற்றி கேவலமாய் “விளக்கம்” கொடுத்தபடி,… வெறிபிடித்த அந்த இஸ்லாமிய கும்பல்!

பின்,.. அவள், மயக்கமானாள்!

ஆனால், அப்பொழுதும், அந்த கும்பல், அவளின் அந்தரங்க பாகங்களை வைத்து “விளையாடின!”

பின்னர்,..
அவர்களில் ஒருவன், அவளுடைய மார்பகங்களை அறுத்து,..
அவைகளை, குருத்வாரா வினுள் எறிந்தான்!
————————————————
குஜ்ரன்வாலா நகர ஹிந்து-சீக்கியர்கள், அம்மாதிரி காட்டுமிராண்டித்தனத்தை, இதுபோல் ஹிந்துப் பெண்களை சிதைப்பது பற்றி கேள்விப்பட்டிருந்தனர்!

முதன்முறையாக, கண்ணால் கண்டனர்!

குருத்வாராவிலுள்ள ஆண்களுக்கு, சட்டென,.. நிதரிசனம் புரிந்தது!

தங்கள் பெண்கள், இந்த காட்டுமிராண்டி கும்பலிடம் சிக்கினால் நிகழப்போகும் கொடுமை, கண்முன் காட்சியாய் விரியத் துவங்கியது!

அந்த தருணத்தில், … சாவு,.. மிகவும் சுலபமான, வலியில்லாத, தீர்வாக தெரிய ஆரம்பித்தது!

மற்றது,.. சாவை விட பலமடங்கு பயங்கரமானது என புரிந்தது!
————————————————
பின்,.. அந்த கும்பல்,…

குருத்வாராவின் கதவுகளை உடைக்க ஆரம்பித்தது!
————————————————
லஜ்ஜோ: “… ம்ம்ம்… எங்களை கொல்ல ஆரம்பிங்க அப்பா! என்னால, ஒரு முஸ்லிமா மாற முடியாது!”

பல்வந்த்: (… பொங்கி அழுகிறார்!)

லஜ்ஜோ: “… சீக்கிரம் கொன்னுட்டு, ஓடிப்போங்க ப்பா! சீக்கிரம்!”

பல்வந்த்: “என்னால் முடியாதும்மா! எப்படிம்மா நான்,…!”

லஜ்ஜோ: “… அப்பா,.. நீங்க இப்போ என்னை கொல்லலைன்னா,.. அவங்க, என்னோட மார்பகங்களை,…” (அவள் வார்த்தையை முடிக்கும் முன், பல்வந்த் வீசிய வாள், அவள் கழுத்தில் இறங்கியது!)

பல்வந்த்தின் வாள் வீச்சு துல்லியமாய் இருந்தது!
தனியே உருண்டோடிய அவள் தலை, அங்கிருந்த கிணற்றில் விழுந்தது !

தலையில்லா அவள் உடலையும்,.. பல்வந்த் அந்த கிணற்றில் தள்ளினார்!

இப்பொழுது, அந்த வெறி பிடித்த கூட்டம் அவள் உடைகளை கிழித்து எறிய முடியாது! அவள் உடலை துண்டு துண்டாக வெட்ட முடியாது!

அவளுக்கு,.. விடுதலை கிடைத்து விட்டது!
————————————————
— அடுத்தது,.. ரஜ்ஜோ வை!

— பின்,.. பாக்கோ வை!

— பின்,.. பாரோ வை!

— பின்,.. காயோ வை!

— பின்,.. இஷோ வை!

கடைசியாக …
— ஊர்மி யை!

அந்த தகப்பன்,…

தன் ஒவ்வொரு மகளின் நெற்றியிலும் கடைசி தன் முத்தம் கொடுத்து,..
உடனே அவள் தலையை வெட்டி எறிந்தார்!
————————————————
பல்வந்த் தன் ஏழு மகள்களுக்கும், விடுதலை பெற்றுத்தந்த நாள்: செப்டம்பர் 18, 1947.

இஸ்லாமிய மத வெறிக்குரலுடன் வந்து கொண்டிருந்த அந்த கூட்டம்,.. அந்த 7 சகோதரிகளுக்கு மிக அருகில் வந்து விட்டிருந்தது! ஆனாலும், அவர்களின் தந்தை, அவர்களை காப்பாற்றி விட்டார்!

அந்த சூழ்நிலையில், உயிர்,.. என்ன பெரிய உயிர்?

அவர்களின் மானம் தப்பித்து விட்டதே!
கூடவே,.. அவர்களின் மார்பகங்களும்,..!!
அவர்கள் முழுமையாய் விடுதலை பெற்று விட்டனரே !!!
————————————————
மிச்சமிருந்த மகள்களின் உடல்களும்,.. கிணற்றுக்குள் தள்ளப்பட்டன!
காரணம்,… இறந்த பெண்களின் உடல்களுக்கு கூட,… பாதுகாப்பில்லாத சூழ்நிலை!

குருத்வாராவின் கதவுகள் உடைக்கப்பட்டன!
ஹிந்து-சீக்கிய வீரர்களின் வாள்கள், பார்க்கும் ஒவ்வொரு இஸ்லாமிய வெறியனின் தலையையும் துண்டித்துக் கொண்டிருந்தன! எண்ணிக்கையில் பலப்பல மடங்கு அதிகமிருந்த அந்த காட்டுமிராண்டி கும்பலை, முடிந்த அளவுக்கு எதிர்த்தனர்!

அந்த ஹிந்து-சீக்கிய குஜ்ரன்வாலா வாசிகள், அந்த நிலம், சர்தார் ஹரி சிங் நல்வா மற்றும் ராம் க்கு சொந்தமானது, என்று தங்கள் வீரத்தில் காட்டினர் !

பல்வந்த்: “பிரபாவதி,.. குருத்வாராவின் பின் கதவு அருகே, லாலா ஜெகஜீவனின் வண்டி காத்துக்கொண்டிருக்கிறது! அவன், இப்போதுதான் எனக்கு செய்தி அனுப்பினான்! அவன், எவ்வளவு பெண்களை, குழந்தைகளை அந்த கதவுக்கு அனுப்ப முடியுமோ, அனுப்பப் சொன்னான்! பாலதேவ்,.. நீ அம்மாவுடன் போ!”

பாலதேவ்: (அமைதியாக தலையை அசைக்கிறான்!)

பிரபாவதி: “ஆனா, நீங்க? நீங்க இல்லாம, நான் எங்கயும் போக மாட்டேன்,..!” (விசும்பி அழுகிறாள்!)

“நீ உயிர் வாழ வேண்டும்,.. உன் வயிற்றில் இருக்கும் நம் பிள்ளைக்காகவாவது! பாலதேவ்,.. நீங்கள் எப்படியாவது இந்தியாவுக்கு சென்று விட வேண்டும்!… நானும் வருவேன்!”

பிரபாவதி: “நீங்க ஏன், எங்க கூடவே வரக்கூடாதா?”

பல்வந்த்: “நீ,.. பாலதேவ், தவிர பிறக்காத நம் பிள்ளையுடன் முதலில் போகிறாய்! நான் அடுத்த கும்பலுடன் வருவேன்! லாலாஜி யும் சில பேரும் உங்களை ஸ்டேஷனுக்கு கூட்டிச் செல்வார்கள்!”

பல்வந்த் அவள் நெற்றியில் முத்தம் கொடுத்து, அவர்களின் குழந்தை இருந்த அவள் வயிற்றை லேசாக தடவிக் கொடுத்தார்! “… சீக்கிரம் கிளம்புங்க!”

பாலதேவ் மற்றும் பிரபாவதியை தாங்கிய அந்த வண்டி,.. ஸ்டேஷனுக்கு கிளம்பியது!
————————————————
பல்வந்த்துக்கு,.. கிட்டத்தட்ட, பைத்தியம் பிடித்தது!

உலகிலேயே, அவர்கள் மானத்தை காக்க, அவர்களின் உடல்களை உயிருடன் நாசம் செய்யும் கொடூரத்திலிருந்த காக்க, தன் சொந்த 7 மகள்களையே கொன்றுவிட்ட ஒரே தகப்பன் அவராக இருக்கலாம்!

நடுங்கும் கால்களுடன், அந்த கிணற்றுக்கு சென்றார்!

“என் இரண்டு குழந்தைகளுக்கு அவர்களின் அம்மா இருக்கிறாள்! இங்குள்ள என் 7 குழந்தைகளுக்கு, அவர்களின் தந்தையாவது வேண்டும்! ஜெய் ஸ்ரீ கிருஷ்ணா!”

என்று உரத்த குரலில் சொல்லியபடி, தன்னைத் தானே கத்தியால் குத்திக்கொண்டு,.. அந்த கிணற்றுக்குள் குதித்தார்!

இந்த மனிதன்,.. சமூகத்துக்கு 7 பத்மினி களை அளித்துள்ளார்!
————————————————
தாத்தா வின் கண்ணீர்,.. நிற்கவில்லை!
என் கண்ணிலிருந்தும் !

நான்: “உங்களுக்கு இதெல்லாம் எப்படி தெரியும்?”

தாத்தா: “பல்தேவ்,.. என் கல்லூரி நண்பன்!”

நான்: “இப்போ, அவர் எங்கே? நான் அவரை சந்திக்கணும்!”

தாத்தா: “பல்தேவ்,.. இறந்து விட்டார்!”
————————————————
அன்றிரவு,.. மிக அதிகம் அழுதேன்!

சட்டென,.. என் சீனியர் சொன்ன வார்த்தைகள் நினைவுக்கு வந்தன:

“… உன் தாத்தாவை கேளு! பணம்,.. அவர் குடும்பத்தை காப்பாற்றியதா என்று!”

நேரே,.. என் தாத்தாவின் அறைக்கு சென்றேன். அவருடைய தனிப்பட்ட பொருட்கள் வைத்திருந்த அறை அது! மெதுவாக, அவருடைய தனி லாக்கரை திறந்தேன்!

அவருடைய இள வயது புகைப்படம் இருந்தது!

அவருடைய அப்பா, அம்மா நடுவில்!
பின்னால் இவர்.
இவரை, இருபுறமும் சுற்றி, சிரித்தபடி நின்றிருந்த,.. அந்த 7 சகோதரிகள்!

சூரியனின், 7 கதிர்கள் போல!
————————————————
பின் குறிப்பு:
எங்கள் வீட்டின் 28 குடும்பத்தார்களை, பாகிஸ்தான் உருவான போது, இழந்தோம்! என் கொள்ளுத்தாத்தா, தாத்தா, அவர் சகோதரர்கள், சகோதரிகள், மற்றும் அவர்களின் குடும்பங்கள் .. கொல்லப்பட்டனர்!

எல்லோரும், தற்போதைய பாகிஸ்தானில் உள்ள குஜ்ரன்வாலா நகரத்தினர் !

அனைவருமே,.. அல்லாவின் பெயரால் – “அல்லாவைத் தவிர கடவுள் இல்லை!” எனச் சொல்லி – கொல்லப்பட்டவர்கள்!

தற்போது, தில்லி ஷாஹீன் பாக் கில் போராடுவோர் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல!

நான்தான் பாதிக்கப்பட்டவன்!

என்னைப்போல், லட்சக்கணக்கில், ஆப்கானிஸ்தானில், பாகிஸ்தானில், பங்களாதேஷில், இஸ்லாமிய மதத்தின் பெயரால், கொடுமைகளை அனுபவிப்பவர்கள் இன்னமும் உண்டு! அவர்கள்தான்,.. நிஜமாய் பாதிக்கப்பட்டவர்கள்! காப்பாற்றப்பட வேண்டியவர்கள்!

நாங்கள், எங்களின் அந்த கொடுமையான நாட்களை, மெள்ள கடந்து வந்துவிட்டோம். ஆனால், இங்கிருந்துகொண்டு, பாகிஸ்தான் மேல் இன்னமும் ஒரு ஈர்ப்புடன் இருப்பவர்கள் அந்த கொடுமையான நாட்களை கடக்கவில்லை!

இப்பொழுது, உணர்கிறேன்: சரித்திரத்தை, ஒருதலைப்பட்சமாக கடந்துவருவது, சரியல்ல! அது, பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாகவும், கொடூரம் செய்தவர்களை பாதிக்கப்பட்டவர்களாகவும், சித்தரிக்கும் அபாயம் உண்டு என புரிகிறது!

அதனால், அனைவரும், நடந்த பழைய கொடுமைகளை உணரும்வரை,.. பழையதை,.. வெறுமென கடந்து வரக்கூடாது!
————————————————
CAA – NRC பற்றிய அடுத்த கட்டுரையை நீங்கள் படிக்கும்பொழுது, இந்த என் வாழ்க்கையையும் சற்று மனதில் இருத்தி,.. படியுங்கள்! இந்தியா எனும் அமைப்பு, நாடு, நீடிக்க, CAA – NRC ஆகியவற்றின் அவசியம் புரியும்.

இதை,.. என் நெருங்கிய நண்பன் – அமெரிக்காவில் உள்ள ஒரு விஞ்ஞானி – நிர்பந்தித்து கேட்டதால் எழுதியுள்ளேன்!

இது அவர் வாழ்வில் நிகழ்ந்தது!
அவர் கதை.

சாமானியன் சுலபமாய் படிக்க, புரிந்துகொள்ள, சற்று படைப்பு சுதந்திரத்தை உபயோகித்துள்ளேன்!

நிஜம்,.. பலப்பல மடங்கு,.. கோரமானது! உங்களால், தாங்கிக்கொள்ள இயலாதது!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

உடனுக்குடன் தினசரி தமிழ்ச் செய்திகளை உங்களது டெலிகிராம் ஆப்.,பில் பார்க்கலாம்!
தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!

https://t.me/s/dhinasari
Whatsapp - தினசரி செய்திகள் சேனலில் இணையுங்கள்!
https://www.whatsapp.com/channel/dhinasari

Follow us on Social Media

19,184FansLike
386FollowersFollow
93FollowersFollow
0FollowersFollow
4,866FollowersFollow
18,200SubscribersSubscribe