போர் என்றால்.. எதிர் நாட்டை வீழ்த்த 10,12 நாட்கள் தான்! பிரதமர்!

இந்தியா பொது தகவல்கள்
modi 7 - 2026

தில்லியில் நடைபெற்று வரும் என்சிசி அமைப்பின் ஒரு மாத கால முகாமில் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த என்சிசி மாணவர்கள் கலந்து கொண்டுள்ளனர். இந்த நிகழ்வில் கலந்து கொண்ட பிரதமர் மோடி என்சிசி மாணவர்களின் அணிவகுப்பை கண்டு ரசித்தார்.

பிறகு பேசிய பிரதமர் மோடி இதற்கு முன்னால் காஷ்மீர் பிரச்சினையை தீர்க்க என்ன மாதிரியான நடவடிக்கை எடுக்கப்பட்டது என்பது குறித்து கேள்வி எழுப்பினார்.

நான்கு குடும்பங்கள் காஷ்மீர் விவகாரத்தை பூதாகரமானதாக மாற்றிவிட்டதாக குற்றம் சாட்டினார். சிஏஏவுக்கு எதிராக போராடுபவர்கள் பாகிஸ்தானில் சிறுபான்மையினர் துன்புறுத்தலுக்கு உள்ளாவதை கண்டுகொள்ள மறுக்கிறார்கள்..

துன்புறுத்தப்பட்டவர்களுக்கு நாம் உதவ வேண்டாமா? சில காலத்திற்கு முன்பு ஒரு பாகிஸ்தான் இராணுவ விளம்பரம் வெளிவந்தது, அதில் முஸ்லிமல்லாதவர்கள் மட்டுமே துப்புரவுத் தொழிலாளர்கள் பதவிக்கு விண்ணப்பிக்கிறார்கள் என்று தெளிவாக எழுதப்பட்டிருந்தது.

இந்தியாவிற்கு எதிராக அண்டை நாடுகள் போர் தொடுத்தால் அவர்களை வீழ்த்த 10.12 நாட்கள் கூட ஆகாது என எச்சரிக்கை விடுக்கும் தோனியில் பேசியுள்ளார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

இந்தியாவின் ஏவுகணை சோதனைகளை தொடர்ந்து பாகிஸ்தான் தனது அணு ஆயுத ஏவுகணையை சோதனை செய்து வெற்றிப்பெற்றது. அதை தொடர்ந்து பிரதமர் இவ்வாறு பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.