
ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் உள்ள Reasi மாவட்டத்தில் பக்கல் மற்றும் கவுரி இடையே இந்த செனாப் ரயில் பாலம் அமைந்துள்ளது
இந்த பாலம் 1,315 மீட்டர் நீளம் கொண்டது மற்றும் செனாப் ஆற்றில் இருந்து சுமார் 359 மீட்டர் உயரத்தில் உள்ளது. மேலும் பிரான்ஸ் நாட்டின் பாரிஸ் நகரில் உள்ள ஈபிள் கோபுரத்தை விட, இந்தியாவில் கட்டப்பட்டு வரும் இந்தச் செனாப் ரயில் பாலம் 35 மீட்டர் அதிக உயரம் கொண்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.

மேலும் இது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் மிகவும் வைரலாகி வருகிறது. அதுவும் மேகங்களுக்கு இடையில் இருக்கும் காட்சி மிகவும் அழகாக இருக்கிறது.
இதனிடையே பா.ஜ.க-வின் தேசிய செய்தித் தொடர்பாளரான சம்பித் பத்ராவும், தனது சோஷியல் மீடியாவில் செனாப் ரயில் பாலத்தின் ஃபோட்டோக்களை ஷேர் செய்து உள்ளார்.

ஜம்மு & காஷ்மீரில் உள்ள இந்த 1315 மீ நீளமுள்ள செனாப் பாலத்தினுடைய படம். இந்த பாலம் உண்மையிலேயே ஒரு பொறியியல் அதிசயம்.
ஆற்றின் படுகை மட்டத்திலிருந்து 359 மீ உயரத்தில் இந்த பாலம் நிற்கும். உலகிலேயே மிகவும் உயரத்தில் அமைந்திருக்கும் ரயில்வே பாலத்தில் இதுவும் ஒன்று என்பதும் குறிப்பிடத்தக்கது.

அந்த வகையில் தற்போது தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா அவர்களும் இது பற்றி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். நாட்டின் சிறந்த பொறியியல் அதிசயங்களில் ஒன்றான இந்திய ரயில்வே பாலத்தின் புகைப்படத்தைப் பகிர்ந்துள்ளார்.
ஜேம்ஸ்பாண்ட் திரைப்படத்தில் அதைக் காட்டலாம் என்று நினைக்கும் அளவுக்கு அந்தத் தனித்துவம் வாய்ந்த ரயில் பாலம் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசின் கூற்றுப்படி, செனாப் பாலம் ஜம்மு காஷ்மீரில் உள்ள இந்தியாவின் முதல் கேபிள் ரயில் பாலமாகும். இது சமீபத்திய வரலாற்றில் இந்தியாவில் எந்தவொரு ரயில்வே திட்டமும் எதிர்கொள்ளும் மிகப்பெரிய சிவில்-இன்ஜினியரிங் சவாலாகக் கூறப்படுகிறது.
இந்த பாலம் விரைவில் ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் உள்ள நாட்டின் மிக தொலைதூர பகுதிகளை பிரதான நிலப்பகுதியுடன் இணைக்கும்.
A salute to our engineers. Added to my bucket list in ‘22-‘23. But I suspect there will be a waiting list for tourists who just want to check it out. 👏👏👏 pic.twitter.com/4cn24Ue9Xn
— anand mahindra (@anandmahindra) March 4, 2021