சுரேஷ் ரெய்னா திருமணத்தில் கோலி, அனுஷ்கா சர்மா ஜோடி!

kohli-anushka இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான சுரேஷ் ரெய்னாவுக்கு வெள்ளிக்கிழமை நாளை திருமணம் நடக்கிறது அவரது திருமண நிகழ்ச்சியில், சுரேஷ் ரெய்னாவின் சகாவும், இந்திய அணியின் துணைத் தலைவருமான கோலி, தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் ஜோடியாகக் கலந்து கொள்கிறாராம். சுரேஷ் ரெய்னாவின் திருமணம் தில்லி நட்சத்திர ஓட்டலில் நடைபெறுகிறது. இந்தத் திருமண விழாவில் கிரிக்கெட் வீரர்களும், பிரபலங்களும் கலந்து கொள்கின்றனர். இதனால், அங்கே பாதுகாப்பு பலப்படுத்தப் பட்டுள்ளது. உலகக் கோப்பை அரையிறுதிப் போட்டியில் சரியாக விளையாடாமல் சொதப்பிய கோலி, தனது காதலியுடன் இத்திருமண விழாவில் பங்கேற்க திட்டமிட்டுள்ளார். இருவரையும் இணைத்து விமர்சனங்கள் அதிகம் எழுந்துள்ள நிலையில், அதை ஒரு பொருட்டாகவே கோலி எடுத்துக் கொள்ளவில்லை. இத்தகைய சூழ்நிலையில், அவர்களின் நண்பர்களுக்கு இடையேயும் இருவரின் வருகை பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.