புர்கா, மத அடிப்படையில் கட்சிகள் பதிவு… இலங்கையில் தடை!

இந்தியா உலகம் சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
srilanka parliament - 2026

தேசிய பாதுகாப்பு காரணமாக ஶ்ரீலங்கன் நாடாளுமன்ற கமிட்டி 2 திட்டங்களை முன்மொழிந்துள்ளது…

  • புர்காவை உடனடியாக தடை செய்ய வேண்டும்
  • இனம் மற்றும் மத அடிப்படையில் தங்களை பதிவு செய்து கொண்ட அரசியல்கட்சிகளை தற்காலிகமாக தடை செய்ய வேண்டும்.!

இது போன்ற உருப்படியான திட்டங்களை நம் நாட்டில் எப்போது எந்தக் கட்சி முன்மொழியுமோ என்று ஏக்கத்துடன் இந்தச் செய்தியைப் பகிர்ந்து வருகிறார்கள் சமூகத் தளங்களில்!

srilanka churcharmy - 2026

இலங்கையில் கடந்த வருடம் ஞாயிறு உயிர்த்தெழுதல் தினத்தன்று கிறிஸ்துவ சர்ச்சுகளிலும் நட்சத்திர விடுதிகளிலும் பயங்கரவாதிகள் தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தினர். இதில் 258 பேர் உயிரிழந்தனர். இதை அடுத்து நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்தும் வகையில், இலங்கை அரசு பல அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

அதன் ஒரு பகுதியாக, இலங்கை நாடாளுமன்ற பாதுகாப்புக் குழு சார்பில் நேற்று ஒரு அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில்…

நாட்டின் பாதுகாப்பு அம்சத்தை கருத்தில் கொண்டு, சில முக்கிய நடவடிக்கைகளை மேற்கொள்ள முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக முஸ்லிம் பெண்கள் முகத்தை மூடும் வகையில் அணியும் புர்கா உடையை இனி எவரும் அணிவதற்கு தடை விதிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.

முகத்தை மூடும் வகையில் யாராவது உடை அணிந்திருந்தால் உடனடியாக அவற்றை அகற்றும்படி சம்பந்தப்பட்ட நபர்களுக்கு உத்தரவிட போலீசாருக்கு அதிகாரம் அளிக்க பரிந்துரை செய்யப்படுகிறது.

இனம் மற்றும் மதத்தின் அடிப்படையில் அரசியல் கட்சிகளை பதிவு செய்யும் நடவடிக்கைக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படுகிறது…என்று குறிப்பிடப் பட்டுள்ளது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.