collector tweet1 - 2026

கிழிச்சுட்டே, போ! என்று நடிகை ரஷ்மிகா மந்தன்னா போஸ்ட் மீது பரபரப்பு ட்வீட் செய்த மாவட்ட கலெக்டர் குறித்து பலத்த விவாதம் எழுந்தது.

ஹீரோயின் ரஷ்மிகா மந்தன்னா மீது தெலங்காணா மாநில, ஜகித்யால கலெக்டர் ரவி செய்த ட்வீட் விவாதத்திற்கு உள்ளானது. ரஷ்மிகா மந்தன்னா தன் புகைப்படங்களை ட்விட்டரில் ஷேர் செய்தார். அதற்கு, “கிழித்துவிட்டாய், போ!” என்று கலெக்டர் கமெண்ட் செய்தார்.

இதுகுறித்து, “உயர்ந்த பதவியில் இருந்துகொண்டு இதுபோல் காமெண்ட் செய்யலாமா?” என்று அவர்மீது நெட்டிசன்கள் விமர்சனம் எழுப்பியுள்ளனர். உடனே சுதாரித்துக்கொண்ட கலெக்டர் ரவி அந்த டுவீட் தான் எழுதவில்லை என்று விளக்கமளித்தார்.

collector tweet - 2026

அது குறித்து போலீசாரை அணுகிய ரவி, தன் ட்விட்டர் அக்கவுண்ட் ஹாக் ஆகிவிட்டது என்றும் விசாரணை நடத்த வேண்டும் என்றும் கோரினார் . ஆனால் கலெக்டர் அக்கவுண்டை ஒரு ஊழியர் ஹாண்டில் செய்வதாக தகவல் வெளியானது. அதே நேரம், அந்த ட்வீட்டையும் கலெக்டர் ரவி நீக்கி விட்டார்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர உத்ஸவ நான்காம் நாளில்..!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending