
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தில் உள்ள சாம்ராஜ்நகர் மாவட்டத்தில் உள்ள குண்டலுபேட்டை கிராமத்தை சார்ந்தவர் மகாதேவம்மா (வயது 42). இவரது மகன்களின் பெயர் சித்தராஜ் (வயது 26) மற்றும் நஞ்சுண்டி (வயது 22). இதே கிராமத்தில் வசித்து வருபவரின் பெயர் சாமி. இவரது மனைவியின் பெயர் மஞ்சுளா. சாமி – மஞ்சுளா தம்பதிக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர்.

இந்த நேரத்தில், நஞ்சுண்டி – மஞ்சுளாவிற்கு இடையே ஏற்பட்ட பழக்கமானது நாளடைவில் கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதனையடுத்து இருவரும் அவ்வப்போது தனிமையில் சந்தித்து பாலியல் உறவில் இருந்து வந்துள்ளனர். இவர்களின் கள்ளக்காதல் விவகாரம் சாமிக்கு தெரியவரவே, சாமி இருவரையும் கண்டித்துள்ளார். இருப்பினும் இவர்கள் இருவரும் கள்ளக்காதல் பழக்கத்தை கைவிடவில்லை.

இதில் அதிக மனஉளைச்சலுக்கு உள்ளாகி சாமி செய்வதறியாது திகைத்து வந்த நிலையில், நஞ்சுண்டி – மஞ்சுளா கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் ஊரைவிட்டு ஓடியுள்ளனர். இதனையடுத்து மஞ்சுளாவின் கணவர் சாமி, சாமியின் தாயார் ஜெயமா மற்றும் உறவினர் கீர்த்தி ஆகியோர் சேர்ந்து மகாதேவம்மாவின் இல்லத்திற்கு சென்று தகராறு செய்துள்ளனர். இதனால் ஏற்பட்ட மன விரக்தியில் மகாதேவம்மா, சித்தராஜ் இருந்து வந்துள்ளார்

இவர்கள் இருவரும் அவமானம் தாங்காது நேற்று திடீரென தூக்கிட்டு தற்கொலை செய்து கொள்ளவே, இவர்களின் உடலை கைப்பற்றிய காவல் துறையினர் மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

பின்னர் இது தொடர்பான விசாரணையில் தற்கொலைக்கு தூண்டியதாக சாமி, ஜெயம்மா, கீர்த்தியின் மீது காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். இவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது



