புதுவை துணைநிலை ஆளுநர் அதிகாரம் குறித்து… உயர் நீதிமன்றம் உத்தரவு!

இந்தியா சற்றுமுன் சென்னை லைஃப் ஸ்டைல்
kiran bedi narayanasami - 2026

புதுச்சேரியில் துணை நிலை ஆளுநருக்கு அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதி உத்தரவு ரத்து செய்யப் படுவதாக, சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.

புதுச்சேரி அரசின் அன்றாட நடவடிக்கைகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற தனி நீதிபதியின் உத்தரவை ரத்து செய்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் புதுவை ஆளுநர் – அரசு இடையே அதிகார பிரச்னை ஏற்பட்டால் மத்திய அரசு தலையிட்டு சமரசம் செய்ய வேண்டும் என்றும் உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரி அரசின் அன்றாட பணிகளில் துணை நிலை ஆளுநர் தலையிட அதிகாரம் இல்லை என்ற உத்தரவை எதிர்த்து கிரண்பேடி மற்றும் உள்துறை அமைச்சகம் சார்பில் தனித்தனியாக மேல்முறையிட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.

முன்னதாக, மத்திய அரசின் அறிவிப்பை ரத்து செய்யக்கோரி எம்.எல்.ஏ. லட்சுமி நாராயணன் தொடர்ந்த வழக்கு விவகாரத்தில், கிரண்பேடிக்கு அதிகாரம் இல்லை என்று தனி நீதிபதி மகாதேவன் உத்தரவு பிறப்பித்திருந்தார். தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து மத்திய உள்துறை, கிரண்பேடி தரப்பில் மேல்முறையீடு செய்யப் பட்டது. இந்த மேல்முறையீட்டு வழக்கில் தலைமை நீதிபதி ஏ.பி.சாஹி, சுப்பிரமணியம் பிரசாத் அமர்வு தீர்ப்பு அளித்தது.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.