லிங்கப் பெருமானுக்கே மாஸ்க் போட்ட அர்ச்சகர்: என்ன காரணம்?!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
mask for bagwan - 2026

இறைவனுக்கு கரோனா வைரஸ்?
கோவிலில் சிவலிங்கத்திற்கு மாஸ்க் போட்ட அர்ச்சகர்.
காரணத்தைக் கேட்டால் அசந்து போய்விடுவீர்கள்.

கரோனா வைரஸ் கோவிட் 19 குறித்து இந்தியாவில் அச்சமும் கவலையும் ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு நாளும் அதிகரித்து வரும் நோயாளிகளின் எண்ணிக்கையால் மக்கள் வெளியில் செல்வதற்கு அஞ்சுகிறார்கள். இந்த வைரஸின் தாக்குதல் இப்போது ஹோலிப்பண்டிகை மீது கூட விழுந்துள்ளது. மக்கள் கூட்டம் கூட்டமாக ஒரு இடத்தில் சேர்ந்து ஹோலி பண்டிகையை நடத்தும் சாகசத்தை செய்ய இயலாமல் வீட்டிற்குள்ளேயே அடைந்து விடுகிறார்கள்.

mask for bagwan2 - 2026

ஆனால் நாம் இதுவரை மனிதர்களுக்கு கரோனா வைரஸ் பரவிவிடும் என்ற பயத்தோடு இருந்தோம் அல்லவா?

இப்போது தெய்வங்களுக்கும் இந்த வைரஸ் பரவுகிறதா?

இந்த கேள்வி மிகவும் விந்தையாக இருக்கலாம் . ஆனால் உத்தரபிரதேசத்தில் வாரணாசியில் உள்ள ஒரு கோவிலுக்குச் சென்றால் மட்டும் நீங்கள் நிச்சயம் ஆச்சரியப்படுவீர்கள்.

கரோனா வைரஸ் பின்னணியில் அந்த கோவில் அர்ச்சகர் பிரகல்லாதீஸ்வரர் ஆலயத்தில் சிவலிங்கத்திற்கு கூட மாஸ்க் போட்டு பூஜைகளை நடத்துகிறார். இதைப் பார்க்கும் பக்தர்கள் கடவுளுக்கு மாஸ்க் போடுவது ஏன் என்று வியக்கிறார்கள்.

mask for bagwan - 2026

இறைவனே அனைவரையும் காப்பாற்றுபவர் அல்லவா? அப்படிப்பட்டவருக்கு மாஸ்க் எதற்காக? என்று கேள்வி கேட்டால் அந்த அர்ச்சகர் அனைவருக்கும் உபயோகப்படும் ஒரு நல்ல விஷயத்தை நல்ல கருத்தை கூறுகிறார். அது என்னவென்றால்… உலக அளவில் கரோனா வைரஸ் அச்சத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது .

இந்த பின்னணியில் மக்களிடம் புரிதல் ஏற்படுத்துவதற்காக இறைவனுக்கு கூட மாஸ்க் போட்டு உள்ளேன். குளிர்காலத்தில் தெய்வங்களுக்கு ஆடை அணிவிக்கிறோம். வெயில்காலத்தில் இறைவனுக்கு வேர்க்கும் என்பதால் மின் விசிறி போடுகிறோம். கரோனா வைரஸ் அனைவருக்கும் பரவக்கூடியது. அதனால் இறைவனுக்கும் பரவாமல் மாஸ்க் போட்டு உள்ளோம் என்று அந்த ஆலய அர்ச்சகர் கிருஷ்ணா ஆனந்த் பாண்டே தெரிவித்தார்.

சிவலிங்கத்திற்கு மாஸ்க்கை பார்த்தவுடன் பக்தர்கள் ஆச்சர்யமாக அவரைப் பார்க்கிறார்கள் என்றும் உண்மையான விஷயம் தெரிந்த பின்பு நல்ல ஆலோசனை என்று பாராட்டுகிறார்கள் என்றும் பாண்டே தெரிவித்தார்.

சிவலிங்கத்திற்கு மாஸ்க் போட்டு இருப்பதோடு கூட ஆலயத்திற்கு வரும் பக்தர்களிடம் சில நிபந்தனைகளையும் கூறுகிறார்.

அது என்னவென்றால்… ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் சிவலிங்கத்தை தொடக்கூடாது என்று பாண்டே கோரிக்கை விடுக்கிறார். ஆலய சுற்றுச்சூழலில் கரோனா வைரஸ் மீது புரிதல் ஏற்படுத்துவதோடு புரிதலை ஏற்படுத்தும் போஸ்டர்கள் கூட ஒட்டி உள்ளது கவனிக்கத்தக்கது.

mask for bhagvan - 2026

” பக்தர்களை சிவலிங்கத்தை தொட வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். வைரஸ் உள்ள பக்தர்கள் சிவலிங்கத்தை தொட்டால் அது பின்னர் வரும் பக்தர்களுக்கும் பரவும் வாய்ப்பு உள்ளது . அதனால் இந்த தடைகளை விதிக்க வேண்டி வந்துள்ளது. அதுமட்டுமல்ல ஆலயத்திற்கு வரும் பக்தர்கள் தவறாமல் மாஸ்க் அணிந்து வரவேண்டும் என்று கூட கோருகிறோம்” என்று தெரிவித்தார்.

எது எப்படி ஆனாலும் இந்த அர்ச்சகரின் இந்த முன்னோக்குப் பார்வைக்கு அனைவரும் சலாம் போட வேண்டியதுதான். இந்த அர்ச்சகரின் ஆலோசனை மீது நெட்டிசன்கள் என்ன சொல்கிறார்கள்? ட்வீட்டில் போய்ப் பாருங்கள். அசந்துவிடுவீர்கள்!

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.