
”கொரோனா பரவலை தடுக்க அனைவரும் விழிப்பாக இருங்கள், வரும் முன் காப்போம்,” என கேப்டன் கோஹ்லி வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இந்தியா, தென் ஆப்ரிக்க அணிகள் மோத இருந்த மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரை கொரோனா வைரஸ் பரவல் அச்சம் காரணமாக, இந்திய கிரிக்கெட் போர்டு (பி.சி.சி.ஐ.,) தள்ளி வைத்தது. இதையடுத்து தென் ஆப்ரிக்க வீரர்கள் அனைவரும் தாயகம் திரும்புகின்றனர்.

இதுகுறித்து இந்திய அணி கேப்டன் கோஹ்லி அனுப்பிய ‘டுவிட்டர்’ செய்தியில்,”கொரோனா வைரஸ் தொற்றை தடுக்க அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்து, எல்லோரும் ஒருங்கிணைந்து வலிமையாக போராடுவோம். வந்த பின் காப்பதை விட வருமுன் காப்பதே சிறந்தது என்பதால் எல்லோரும் விழிப்பாக இருங்கள். ஒருவருக்கு ஒருவர் கவனம் செலுத்தி பாதுகாப்பாக இருங்கள்,’ என தெரிவித்துள்ளார்.

இந்திய அணி வீரர் லோகேஷ் ராகுல் வெளியிட்ட ‘டுவிட்டர்’ செய்தியில்,’இது எல்லோருக்கும் சோதனைக் காலம். ஒருவர் மீது ஒருவர் கவனம் செலுத்தி வலிமையான முறையில் இணைந்திருப்போம். சுகாதாரத்துறை வழங்கும் ஆலோசனைகளை எல்லோரும் பின்பற்றி, கொரோனா வைரஸ் தாக்கத்தில் இருந்து பாதுகாப்பாக இருப்போம்,’ என தெரிவித்துள்ளார்.

இந்திய அணி முன்னாள் வீரர் லட்சுமண் கூறுகையில்,” ஒருவர் தன்னை தனிமைப்படுத்திக் கொள்வதால் மற்றவர்கள் பாதுகாக்கப்படுகின்றனர். எல்லோரும் பொறுப்பாக செயல்பட்டு, தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்க வேண்டும். ஏதாவது அறிகுறி தெரிந்தால் நீங்களாவே சென்று சோதனை செய்து கொள்ளுங்கள். ஒருவேளை வைரஸ் பாதிப்பு உறுதி என்றால் தனிமைப்படுத்திக் கொண்டு, மற்றவர்களை காப்பாற்றுங்கள்,” என்றார்.
Let's stay strong and fight the #COVID19 outbreak by taking all precautionary measures. Stay safe, be vigilant and most importantly remember, prevention is better than cure. Please take care everyone.
— Virat Kohli (@imVkohli) March 14, 2020
In these testing times let's stay strong and care for each other. Urging everyone to follow the instructions given by health experts and stay safe #coronavirus.
— K L Rahul (@klrahul11) March 14, 2020
One who stays away can save the rest. Requesting everyone to take the necessary precautions & be responsible. If you have symptoms, please get yourself tested. If you have tested positive please be in isolation and help prevent others. Together we can overcome this soon #COVID19 pic.twitter.com/uFnoWFMqyV
— VVS Laxman (@VVSLaxman281) March 14, 2020



