உலகையே அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸின் தொடக்கம் சீனாவின் வூஹான் நகர் என்பது சைனாவே ஒப்புக் கொண்ட விஷயம். ஆனாலும், இந்த வைரஸின் தொடக்கத்துக்காக, அமெரிக்காவைக் குற்றம் சாட்டியது சீனா. பதிலுக்கு சீனாவின் செயல்களால் உலகம் இன்று சிரமப்படுகிறது என்று அமெரிக்கா குற்றம் சாட்டி வருகிறது.
இரு தரப்பும் மாறி மாறி குற்றம் சுமத்திக் கொண்டாலும், உலக மக்களின் ஒட்டுமொத்தமான கருத்து, சீனர்களின் மாறிவிட்ட வாழ்வியல் முறையும், அந்நாட்டின் பாரம்பரியத்தை மறந்து, நவீன வாழ்க்கை முறை என்று, பறப்பன, ஊர்வன, நடப்பன என்று எந்த வித பாகுபாடும் இன்றி, அனைத்தையும் உணவாக்கி மனிதர்கள் தின்பது தான் என்கின்றனர். உண்பதை மறந்து, தின்பதை நினைத்துக் கொண்டதால்தான் சீனர்களால் இந்த பாதிப்பு உலகுக்கு ஏற்பட்டுள்ளது என்பதை குறிப்பிட்டுக் காட்டுகின்றனர் பலர்.
சீனாவின் வூஹான் நகரில் இருந்து பரவ துவங்கிய கொரோனா வைரஸ் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. உலகளவில் இந்த வைரசுக்கு 7,982 பேர் உயிரிழந்துள்ளனர். 1,98,400 பேர் பாதிக்கப்பட்டனர். அதில், 82 ,763 பேர் சிகிச்சைக்கு பின் குணமடைந்துள்ளனர். மற்றவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.