எய்ம்ஸ் மருத்துவரின் நிறைமாத கர்ப்பிணி மனைவிக்கும் தொற்று! தீவிர சிகிச்சை!

pregnent

உலக அளவில் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 1 கோடியை எட்டியுள்ள நிலையில், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை கடந்துள்ளது. 180க்கும் மேற்பட்ட உலக நாடுகளில் பரவியுள்ள இந்த வைரஸ், இந்தியாவிலும் கடும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

இருப்பினும், மத்திய அரசு கொரோனா வைரசுக்கு எதிராக கடும் நடவடிக்கையை எடுத்து வருகிறது. நாடு முழுவதும் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ள நிலையிலும், மருத்துவர்கள், செவிலியர்கள், காவல்துறை உள்ளிட்டோர் தொடர்ந்து மக்களுக்காக பணியாற்றி வருகின்றனர்.

சென்னையில் மிகப்பெரிய மருத்துவமனையான எய்ம்ஸ் மருத்துவமனையில் பணியாற்றி வரும் டாக்டருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் அவரது மனைவிக்கும் கொரோனா வைரஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கணவர் மூலம் மனைவிக்கு பரவியிருக்கலாம் என கூறப்படுகிறது. தற்போது நிறைமாத கர்ப்பிணியாக இருக்கும் அவருக்கு அவசர பிரிவில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :