
கொரோனா வைரஸ் தடுப்பு பணியில் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் விளையாட்டு நட்சத்திரங்களுக்கு மோடி பாராட்டு தெரிவித்தார்.இந்தியாவில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுகிறது.
இதைத் தடுக்கும் வகையில் நாடு முழுவதும் 21 நாள் ஊரடங்கு உத்தரவு பின்பற்றப்படுகிறது. இதுகுறித்து இந்திய விளையாட்டு நட்சத்திரங்கள் மக்களிடம் அவ்வப்போது விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.

இவர்களை பாராட்டும் வகையில் நேற்று பிரதமர் மோடி, ‘வீடியோ கான்பெரன்சிங்’ வழியில் உரையாடினார். இந்திய கிரிக்கெட் அணி ‘சீனியர்’ தோனி, கேப்டன் கோஹ்லி, ஓய்வு பெற்ற ‘ஜாம்பவான்’ சச்சின், இந்திய கிரிக்கெட் போர்டு தலைவர் கங்குலி, தமிழகத்தின் ஆனந்த் (செஸ்), சரத் கமல் (டேபிள் டென்னிஸ்), மேரி கோம் (குத்துச்சண்டை), சிந்து (பாட்மின்டன்), ஹிமா தாஸ் (தடகளம்), நீரஜ் சோப்ரா (ஈட்டி எறிதல்), மனு பாகர் (துப்பாக்கிசுடுதல்) உள்ளிட்ட 49 நட்சத்திரங்கள் மற்றும் மத்திய விளையாட்டு அமைச்சர் கிரண் ரிஜ்ஜிஜு பங்கேற்றனர்.

நேரமின்மை காரணமாக 12 பேருக்கு மட்டும் பேச வாய்ப்பு தரப்பட்டது.
நேரமின்மை காரணமாக 12 பேருக்கு மட்டும் பேச வாய்ப்பு தரப்பட்டது. ஒவ்வொரு வரும் தலா 3 நிமிடம் தங்களது கருத்துக்களை தெரிவித்தனர். சுமார் ஒருமணி நேரம் நடந்த இந்த உரையாடலில், தேசத்துக்கு பெருமை சேர்த்த அனைவரையும் பாராட்டினார்.
இந்தியாவில் ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ளது. இந்த நேரத்தில் தேசத்தின் மன உறுதியை அதிகரிக்கும் செயலில் விளையாட்டு நட்சத்திரங்களான நீங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றீர்கள். மக்கள் அரசின் அறிவுரைகளை பின்பற்ற வேண்டும், சமூக விலகலை கடைபிடிக்க வேண்டும் என அடுத்தடுத்து செய்திகள் வெளியிடுகின்றீர்கள்.

சவால்களை எதிர்கொள்ளும் திறமை, சுய ஒழுக்கம், நேர்மறை எண்ணங்கள், தன்னம்பிக்கை என விளையாட்டு பயிற்சியில் கற்றுக் கொண்ட பண்புகள் இன்று கொரோனா வைரசை எதிர்த்து போராடுவதற்கான முக்கிய கருவிகளாக உங்களுக்கு உள்ளன.
தற்போது நீங்கள் தெரிவித்த பரிந்துரைகள் கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். ஒட்டுமொத்த இந்திய அணியாக இணைந்து கொரோனாவை எதிர்த்து போராடுகிறோம். நீங்கள் தரும் உற்சாகத்தால் இந்தியா விரைவில் புத்துயிர் பெறும் என நம்புகிறேன்.
- தொற்று நோயை எதிர்த்து போராடுவது.
- சமூக விலகலை பின்பற்றுவது.
- நேர்மறையான எண்ணங்கள்.
- கொரோனா தொற்றை எதிர்த்து போராடும் போர்க்களத்தில் முன்னணியில் உள்ள மருத்துவம், காவல்துறையினருக்கு மரியாதை தருவது.
- தனிப்பட்ட, தேசிய அளவில் பிரதமர் நிதிக்கு பங்களிப்பு தருவது.
என ஐந்து முக்கிய தகவல்களை நீங்கள் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக் கொண்டார்.
இந்திய தடகள வீராங்கனை ஹிமா தாஸ், மோடியிடம் கூறுகையில்,”மக்கள் ஊரடங்கை சரியாக பின்பற்றுவதில்லை. டாக்டர்கள் மற்றும் போலீசார் மீது மக்கள் கல்லெறிந்து விரட்டுவது வருத்தம் தருகிறது,” என்றார்.
இந்திய கிரிக்கெட் ‘ஜாம்பவான்’ சச்சின் கூறுகையில்,”ஊரடங்கு நேரத்தில் எப்படி நாம் நடந்து கொள்கிறோம் என்பது மிக முக்கியம். இது இக்கட்டான நேரம். இனிமேல் முடிந்த வரை கைகுலுக்குவதற்குப் பதில், இரு கை கூப்பி வணங்க வேண்டும். நான் இதைத் தான் பின்பற்றுகிறேன். வைரஸ் தொற்றில் இருந்து மீண்டு வந்த பிறகும் இதைத் தொடர வேண்டும்,” என்றார்.
இந்திய கபடி அணி முன்னாள் கேப்டன் அஜய் தாகூர் கூறுகையில்,”கொரோனா வைரசால் உலகின் பல நாடுகள் மோசமாக பாதிக்கப்பட்டுள்ளன. சரியான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்தால் இதில் இருந்து நம்மை காப்பாற்றிக் கொள்ளலாம். ஊரடங்கை கண்டிப்பான முறையில் பின்பற்ற வேண்டும். வீட்டில் பாதுகாப்பாக இருங்கள்,” என்றார்.
PM Modi during interaction with sportspersons gave five-point mantra of ‘Sankalp,Sanyam,Sakaratmakta,Samman & Sahyog’ to tackle COVID19. PM said that sportspersons have brought glory to nation&now have important role to play in boosting morale of nation& spreading positivity:PMO https://t.co/YloYhyv4Ql
— ANI (@ANI) April 3, 2020



