நாளை இரவு 9 மணிக்கு இதெல்லாம் அணைச்சிடாதீங்க! மின்சார வாரியம் வேண்டுகோள்!

tamilnadu electricity board

நாளை இரவு தமிழகத்தில் மின்விளக்குகளை தவிர்த்து வேறு எதையும் அணைக்க வேண்டாம் என மின்சார வாரியம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

கொரோனாவுக்கு எதிராக நாட்டு மக்கள் அனைவரும் ஒற்றுமையுடன் இருக்கிறார்கள் என்பதை உணர்த்தும் விதமாக நாளை இரவு (05.04.20) இரவு 9 மணிக்கு 9 நிமிடங்களுக்கு மின் விளக்குகள் அனைத்தையும் அணைத்துவிட்டு அகல் விளக்கு, மெழுகுவர்த்தி, டார்ச் போன்றவற்றை ஒளிரச் செய்ய வேண்டும் என பிரதமர் மோடி கேட்டுக்கொண்டுள்ளார்.

இது தொடர்பாக தமிழ்நாடு மின்சார வாரியம் தமிழக மக்களிடம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளது. அதன்படி, நாளை இரவு மக்கள் மின் விளக்குளை மட்டும் அணைக்க வேண்டும் என்றும், பிரிட்ஜ், மின்விசிறி உள்ளிட்ட மின் சாதனங்களை அணைக்க வேண்டாம் என கேட்டுக்கொண்டுள்ளது.

அப்படி அனைத்து மின் சாதனங்களையும் அணைத்துவிட்டு ஒரே நேரத்தில் ஆன் செய்வதன் மூலம் மின்சார பிரச்னை ஏற்படும் என்றும் தமிழ்நாடு மின்சார வாரியம் தெரிவித்துள்ளது

light

ஒரே நேரத்தில் அனைத்து விளக்குகளையும் அணைத்தால் அதன் காரணமாக மின்சாரத் துறையில் பல சாதனங்கள் சேதமடைய வாய்ப்பு உண்டு என்றும் எனவே திடீரென மின் குறைபாடு ஏற்பட்டால் மின்சார மின் துறையின் கருவிகள் பழுதடையும் என்பதால் மக்களுக்கு உயிர் காக்கும் சிகிச்சை அளிக்கக்கூடிய மருத்துவமனைகளுக்கு மின்வெட்டு ஏற்படுவதால் பலர் உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றும், அதை தவிர்ப்பதற்காக வீட்டிலே மின்விளக்குகளை நிறுத்தும்போது வீட்டில் இருக்கும் மற்ற மின்சாதன கருவிகளான ஃப்ரிட்ஜ் வாஷிங் மிஷின் ஏர் கண்டிஷனர் போன்றவற்றை ஓட விடுமாறு வேண்டுகிறார்கள்

அப்படிச்செய்தால் தான் மின் சமநிலை ஏற்படும் மின்சார கருவிகள் பழுதடையாமல் இருக்கும் என்றும் மின்சார துறையைச் சேர்ந்த தொழில்நுட்ப வல்லுனர்கள் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்கள்

Advertisements
வெள்ளித்திரை செய்திகள் :