அசாம் மருத்துவமனையிலும்… தப்ளிக் இ ஜமாத் உறுப்பினர்களின் கொடூர சேட்டைகள் தொடர்கின்றன…. மருத்துவமனையில் கூடவா இவ்வாறு நடந்து கொள்வார்கள் என்று சமூக அருவெறுப்பை சம்பாதித்துள்ளார்கள் அவர்கள்!
அசாம் கோலாகாட் மருத்துவமனையில் 42 பேர் தற்போது தனிமைப்படுத்தல் வார்டுகளில் உள்ளார்கள். அவர்கள் டாக்டர்கள் கூறுவதைக் கேட்காமல் தரையெங்கும் எச்சில் துப்பி வருகிறார்கள். அதுமட்டுமின்றி ஜன்னல் வழியாக வெளியேயும் துப்பி வருகிறார்கள்.
மருத்துவர்கள் எத்தனை எடுத்துக் கூறினாலும் கேட்காமல் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள். அதனால் டாக்டர்கள் அதிகாரிகளுக்கு புகார் செய்துள்ளார்கள். மாநில சுகாதாரத்துறை அமைச்சர் விசுவகர்மா மருத்துவமனையை வந்து பார்ப்பதற்குச் சற்று முன்பு இந்த சம்பவம் நடந்தது.
கொரோனா தனிமைப்படுத்தலில் மொத்தம் 42 பேர் உள்ளார்கள். இவர்கள் அனைவரும் தில்லியில் உள்ள தப்ளிக் இ ஜமாத் இஸ்லாம் மத பிரார்த்தனை கூட்டத்தில் பங்கு கொண்டு வந்தவர்களே. அது மட்டுமின்றி அவர்களுக்கு கொரோனா வைரஸ் நோய்க்கான அறிகுறிகள் இருப்பதால் இவர்களை தனிமைப்படுத்தி உள்ளார்கள்.
ஆனால் தாம் ஆரோக்கியமாகவே இருப்பதாகக் கூறி டாக்டர்களுக்கு ஒத்துழைப்பு தராமல் விபரீதமான சேட்டைகளில் ஈடுபடுகிறார்கள். இது குறித்து மருத்துவர்கள் அரசிடம் புகார் அளித்துள்ளனர்.
தில்லி தப்ளிக் இ ஜமாத் மார்கஸ் பிரார்த்தனைக் கூட்டத்தில் கலந்து கொண்டு பல மாநிலங்களுக்கும் திரும்பி வந்தவர்கள் அனைவரும் ஒரே மாதிரியாக இவ்வாறு எச்சில் துப்பி நோயைப் பரப்புவதும், அனைவரும் ஒரே மாதிரியாக நடந்து கொள்வதும் இப்போது பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில், தில்லி கூட்டத்துக்குச் சென்று வந்தவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டு, அவர்கள் குடும்பத்தினரிடையே கூட இந்த வைரஸ் பரவாமல் அரசு காப்பாற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வேண்டுகோள்கள் முன்வைக்கப் படுகின்றன.