கொரோனா பாதிக்கப்பட்டவர்கள் குறித்த ஆய்வு முடிவுகள் அடிப்படையில், இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் தில்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள் என்று தெரிவித்தார் தமிழக சுகாதாரச் செயலர் பீலா ராஜேஷ்.
நாடு முழுதும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 3374 ஆக உயர்ந்துள்ளது. நேற்று முதல் இதுவரை 472 பேருக்கு புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப் பட்டுள்ளது.
கொரோனாவுக்கு இதுவரை 79 பேர் உயிரிழந்துள்ளனர். 267 பேர் குணமடைந்துள்ளனர் என்று, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தகவல் வெளியிட்டுள்ளது. நாடு முழுவதும் 274 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது!
இந்நிலையில், இன்று மாலை தமிழக சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ் செய்தியாளர்களைச் சந்தித்து, இன்றைய கொரோனா நிலவரம் குறித்த தகவல்களை அளித்தார்.
அப்போது அவர், தமிழகத்தில் மேலும் 86 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது! கொரோனாவால் பாதிக்கப்பட்டோர் எண்ணிகை 485 லிருந்து 571 ஆக அதிகரித்துள்ளது என்று கூறினார்!!
மேலும் அவர்கூறியதாவது…
இன்று பாதிப்படைந்த 86 பேரில் 85 பேர் டெல்லி மாநாட்டுக்கு சென்று வந்தவர்கள்.
கொரோனா பாதிப்பில் தமிழகம் தொடர்ந்து 2ம் கட்டத்தில் தான் உள்ளது !
டெல்லி சென்று வந்த 1246 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப் பட்டுள்ளனர்.
இந்தியாவிலேயே அதிகமான கொரோனா பரிசோதனை மையங்கள் தமிழகத்தில் தான் உள்ளன.
மகாராஷ்டிராவைவிட தமிழகத்தில் தான் அதிக ரத்த மாதிரி பரிசோதனைகள் செய்யப்பட்டுள்ளன!
நிலைமை தீவிரமான பிறகு சிகிச்சைக்கு வருபவர்களே உயிர் இழக்கின்றனர்.
28 நாட்கள் கண்காணிப்பில் எப்போது வேண்டுமானாலும் கொரோனா உறுதியாகலாம்.
2 முறைக்கு மேல் சோதனையில் இல்லை என்று முடிவு வந்தபிறகே அவர்களை வீட்டுக்கு அனுப்புவோம்.
தேவையான முன்னெச்சரிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
எல்லோரும் இணைந்து 3 ஆம் கட்டத்திற்கு செல்லாமல் தடுக்க வேண்டும் என்று கூறினார் சுகாதாரத்துறை செயலாளர் பீலா ராஜேஷ்.
மாவட்ட வாரியாக கொரொனா பாஸிட்டிவ் உறுதிசெய்யப் பட்டவர்கள்: