வாட்ஸ்அப் ஷேரிங் ஆப்ஷனில் கட்டுப்பாடு! எல்லாம் கொரோனா வதந்திகளால்!

Published:

whats app - 2026

வாட்ஸ்ஆப் – புதிய கட்டுப்பாடு விதித்துள்ளது. கொரோனா தொடர்பான வதந்திகள் பரவுவதை தடுக்க வாட்ஸ் ஆப்பில் தகவல் அனுப்புவதில் புதிய கட்டுப்பாடு கொண்டு வந்துள்ளது.

வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தியை ஒரே நேரத்தில் இனி ஒரு நபருக்கு மட்டுமே ஷேர் செய்ய முடியும்! வாட்ஸ்ஆப்பில் ஒரு செய்தியை இனி ஒரே நேரத்தில் 5 பேருக்கு அனுப்ப முடியாது! முன்னர் வாட்ஸ் அப் வழியே பலருக்கு ஒரே நேரத்தில் அனுப்பும் வசதி இருந்தது. ஆனால் வதந்திகள் பரவுவதைத் தடுக்கும் நோக்கில், ஒரே நேரத்தில் 5 பேருக்கு மேல் ஷேர் செய்ய இயலாத படி மாற்றப் பட்டது. இது தற்போது, ஒருவருக்கு மட்டுமே ஒரே நேரத்தில் பார்வர்ட் செய்ய இயலும் வகையில் கட்டுப் படுத்தப் பட்டுள்ளது.

கொரோனா குறித்த வதந்திகள், மக்களை அச்சுறுத்தும் வகையில் பரப்பப் படுவதைத் தடுக்க இத்தகைய நடவடிக்கையை வாட்ஸ் அப் நிறுவனம் எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

ALSO READ:  நீரில்லா வைகை; வறண்டு போன மணலாற்றில் ஆடி அமாவாசை வழிபாடு!

Related articles

Recent articles

spot_img