பிக்பாஸில் ஆண்டி! இப்பொழுது ப்யூட்டி! ஷெரினின் புகைப்படத்தைக் கண்டு ஜொள்ளு விட்ட ரசிகர்!

சினி நியூஸ்

அப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன்

சமூகவலைத்தளத்தில் தன்னுடைய தோற்றத்தைக் கிண்டல் செய்த ரசிகருக்குப் பதில் அளித்துள்ளார் ஷெரின்.

e0cbac583bb76ba980b5db938158a6ce - 2026

பெங்களூரைச் சேர்ந்த ஷெரின், 2002-ல் வெளியான துள்ளுவதோ இளமை படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார், கடந்த வருடம் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று மேலும் புகழை அடைந்தார்.

282de2e68a519399b0f4f30cc6e03bf4 - 20260101455ad8eac99fb26971a9e401fb33 - 2026

சமீபத்தில் சமூகவலைத்தளத்தில் தன்னுடைய படம் ஒன்றைப் பதிவேற்றினார் ஷெரின். அதைக் கண்ட ரசிகர் ஒருவர், பிக் பாஸில் நுழைந்தபோது நீங்கள் நடுத்தர வயது ஆண்ட்டி போல இருந்தீர்கள். ஆனால் அப்படி எண்ணியதற்கு இப்போது வருந்துகிறேன். உங்களுக்கு நாளுக்கு நாள் இளமை அதிகமாகிக் கொண்டு இருக்கிறது என்று எழுதினார்.

019fd33d5a1c692b4fd142ae948a1e09 - 20268d0e850582bcc2c5749e1f684a90247c - 2026
இதற்குப் பதிலளித்த ஷெரின், ஆமாம்… தோற்றத்தைக் கொண்டு மனவேதனையைத் தரும்படியான எதிர்வினைகளைப் பலரும் தருகிறார்கள். நாம் மேலோட்டமான உலகில் வாழ்கிறோம் என்பதை இது நிரூபிக்கிறது. சுய அன்பும் சுய அங்கீகாரமும் நம் வாழ்க்கைக்கு அவசியம் என்கிற கருத்தாக்கத்தை இது உறுதிபடுத்துகிறது என்று பதில் அளித்துள்ளார்.

f28f2a98093f6fbe59f2a971974104c5 - 20265e28f84adead77f61e1fb65c012915b1 - 2026

Source: Vellithirai News

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.