December 6, 2025, 1:36 PM
29 C
Chennai

டிரம்ப் கோபமாம்… அதனால பயந்து இந்தியா மருந்தை அனுப்புதாம்..! இன்னாங்கடா கத வுட்றீங்க..?!

narendra modi trump - 2025

அமெரிக்காவுக்குத் தேவையான ஹைட்ராக்ஸி-க்ளோரோக்யுன் மருந்தை இந்தியா அனுப்ப தடை விதித்துவிட்டதாகவும், அதனால் டிரம்ப் வெகுண்டு எழுந்து, இந்தியாவை பழிதீர்ப்போம் என்று மிரட்டியதாகவும், அதனால் பயந்து போய் இந்தியா மருந்தை அனுப்ப சம்மதித்ததாகவும் ஒரு செய்தியை இன்று ஊடகங்கள் வெளியிட்டு வருகின்றன. ஆனால் உண்மையோ வேறு!

அமெரிக்காவுக்கு மருந்து அனுப்புதல் குறித்து இன்ற் விளக்கம் அளித்தது மத்திய அரசு! அப்போது, கொரானோ அதிகம் பாதிக்கப்பட்ட நாடுகளுக்கு மனிதாபிமான அடிப்படையில் உதவி வருகிறோம்! பாராசிட்டமால், ஹைட்ராக்ஸி குளாரோ குயின் மருந்துகளை வழங்க முடிவு செய்துள்ளோம் என்று விளக்கம் அளித்தது மத்திய அரசு!

மேலும், இந்த விவகாரத்தில் அரசியல் செய்யப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்றும், ஹைட்ராக்ஸி குளோரா குயின் ஏற்றுமதி தொடர்பாக மத்திய அரசு விளக்கம் அளித்தது. அந்த வகையில், அமெரிக்காவுக்கு ஹைட்ராக்ஸி குளோராகுயின் மருந்தை வழங்குகிறது இந்தியா. அண்டை நாடுகள், கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு மருந்து அனுப்புகிறது இந்தியா.

முன்னதாக, ஹைட்ரோ குளோரோ குயின் மருந்தை வழங்காவிட்டால் உரிய பதிலடி கொடுக்கப்படும் என அமெரிக்க அதிபர் மிரட்டும் தொனியில் எச்சரிக்கை விடுத்திருந்ததாகவும், அதனால் இந்தியா பயந்து போய் இந்த அறிவிப்பு வெளியிட்டதாகவும் செய்திகள் பகிரப் பட்டன. அதே நேரம், அமெரிக்காவின் மிரட்டும் தொனிக்கு பணியக்கூடாது என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தின. இந்த நிலையில் இந்தியா இந்த முடிவினை இன்று வெளிப்படையாக அறிவித்தது. எனவேதான், மனிதாபிமான அடிப்படையில் நாம் செய்யும் உதவிகள் அரசியலாக்கப்படுவதை இந்தியா விரும்பவில்லை என்றே குறிப்பிட்டு, இதனை மத்திய அரசு அறிவித்தது.

trump modi - 2025

ஆனால் நடந்தது என்ன?
கொரோனா சிகிச்சைக்கு, ஹைட்ராக்சிகுளோரோகுயின் எனப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யவில்லை என்றால், இந்தியாவுக்கு பதிலடி இருக்கக்கூடும் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்ததாக செய்தி வெளியானது.

அதாவது ஞாயிற்றுக்கிழமை வெள்ளை மாளிகையில் செய்தியாளர்கள் சந்திப்பின் போது பேசிய டிரம்ப், “எங்களுக்கான மருந்தை அனுமதித்தால் நன்றாக இருக்கும் என மோடியிடம் கூறியிருந்தேன். அவர் எனது கோரிக்கையை நிராகரிக்கவில்லை. அமெரிக்காவுடனான இந்திய உறவு சிறப்பாகவே உள்ளது… என்று கூறினார்.

அப்போது ஒரு நிருபர் குறுக்கிட்டு, மோடி அவ்வாறு ஏற்றுமதிக்கு அனுமதிக்காவிட்டால்… என்று கேள்வி எழுப்பினார். அதற்கு பதிலளித்த டிரம்ப், ஒருவேளை அவர் அனுமதிக்கவில்லை என்றாலும் பராவாயில்லை. ஆனால், அதற்கான பதிலடி இருக்கக்கூடும்” என்று கூறினார்.

முன்னதாக, ஞாயிற்றுக்கிழமை பிரதமர் மோடியும், அமெரிக்க அதிபர் டிரம்பும், கொரோனா பாதிப்புகள் குறித்து தொலைபேசி வழியே நேரடியாக விவாதித்தனர். அப்போது, கொரோனா சிகிச்சையில் முக்கியப் பங்கு வகிக்கும் ஹைட்ராக்சி-குளோரோகுயின் எனப்படும் மலேரியா எதிர்ப்பு மருந்தை, அமெரிக்க கம்பெனிகள் மார்ச் மாதம் ஆர்டர் செய்திருப்பதாகவும், அதனை அனுப்பி வைக்கும் படியும் அப்போது மோடியிடம் டிரம்ப் வலியுறுத்தினார். அதற்கு பதிலளித்த மோடி, ‘எங்களால் முடிந்த அனைத்தையும் செய்கிறோம்’ என்றார்…

https://twitter.com/MichaelCoudrey/status/1247229656593391616

இந்தியாவிலும் கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில், உள்நாட்டுத் தேவைக்கு கூடுமான வரையில் மருந்துகளை இருப்பில் வைத்துக் கொள்ள மத்திய அரசு அறிவுறுத்தியது. எனவே, உள்நாட்டில் தேவை அதிகரிக்கும் என்பதால், இது போன்ற மருந்துகளின் ஏற்றுமதிக்கு இந்திய அரசு தடை விதித்தது.

ஹைட்ராக்சிகுளோரோகுயின் மருந்தை உற்பத்தி செய்யும் நாடாக இந்தியா உள்ளது. மலேரியா எதிர்ப்பு மருந்தான இது, கொரோனாவுக்கு எதிராக செயல்படுகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இதுவரை இல்லை. இருப்பினும், சிகிச்சையில் குறிப்பிடத்தக்க முன்னேற்றம் ஏற்படுவதால், இம்மருந்தின் தேவை அதிகரித்துள்ளது.

அமெரிக்கா மட்டுமல்லாது, மேலும் சில நாடுகளும் இந்தியாவிடம் பாராசிட்டமால், ஹைட்ரோக்ளோரோக்யுன் மருந்துகளை ஆர்டர் செய்திருந்தன. இன்றைய சூழ்நிலையில், அமெரிக்காவில் இறக்குமதி செய்யப் படும் மலேரியா உள்ளிட்ட சிகிச்சைகளுக்கான மருந்துகளில் பாதிக்கும் மேற்பட்ட அளவில் இந்தியாவில் இருந்தே அமெரிக்கா இறக்குமதி செய்கிறது.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் டிரம்ப், இந்தியா மேற்கொண்டுள்ள மருந்து ஏற்றுமதி தடை குறித்து விசாரித்து, மார்ச் மாதமே மருந்துகளுக்கு அமெரிக்க நிறுவனங்கள் ஆர்டர் கொடுத்திருப்பதால், சூழ்நிலையின் தீவிரம் கருதி உடனே மருந்தை அனுப்பி வைக்க உதவுமாறு கோரினார். அதனை ஏற்றுக் கொண்டு, தங்களால் இயன்ற அனைத்தையும் செய்வதாக மோடி பதில் அளித்துள்ளார்.

trump pressmeet - 2025

இது குறித்தே நிருபர் ஒருவர், அவ்வாறு மோடி அனுப்ப சம்மதிக்கவில்லை என்றால்… ? என ஒரு கேள்வியை எழுப்ப, அதற்கு பதில் அளித்த டிரம்ப் உரிய பதில் அளிப்போம் என்றார். ஆனால் இந்த விவகாரம், அரசியல் ஆக்கப் பட்டு, இந்தியாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை என்றும், மோடியை எச்சரித்த டிரம்ப் என்றும் செய்திகளை உள்நோக்கத்துடன் ஊடகங்கள் வெளிப்படுத்தும் நிலைக்கு இட்டுச் சென்றிருக்கிறது.

இன்று, வெளியுறவு அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் அனுராக் ஸ்ரீவஸ்த்வா கூறுகையில், கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், மனிதநேய அடிப்படையில், பாராசிட்டமால் மற்றும் ஹைட்ரக்ஸிகுளோரோகுயின் மருந்தை தேவையான அளவு, நம்மை சார்ந்துள்ள அண்டை நாடுகளுக்கு, தேவைப்படும் நாடுகளுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி வழங்குவது என இந்தியா முடிவு செய்துள்ளது.

கொரோனாவால் மோசமாக பாதிக்கப்பட்டுள்ள சில நாடுகளுக்கு இந்த அத்யாவசிய மருந்தை நாம் வழங்குவோம். இந்த விவகாரத்தில் யூகத்தை கிளப்பவும், அரசியலாக்குவதையும் அனுமதிக்க முடியாது. கொரோனா அச்சுறுத்தல் உள்ள சூழ்நிலையில், சர்வதேச நாடுகள் வலிமையான ஒத்துழைப்பு மற்றும் ஒற்றுமையை வழங்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது என்றார் அவர்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

Topics

வாராணசியில் கைவினைப் பொருட்களின் தனித்துவக் கண்காட்சி!

இந்தியாவின் பன்முகத்தன்மையை ஒன்றிணைத்து அதன் கலாச்சார வேர்களை புதிய தலைமுறைகளுக்கு அனுப்புவதை நோக்கமாகக் கொண்ட காசி தமிழ் சங்கத்தின் உணர்வை இந்த அரங்கம் உண்மையிலேயே பிரதிபலிக்கிறது.

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

Entertainment News

Popular Categories