December 6, 2025, 10:31 AM
26.8 C
Chennai

மயங்கி விழுந்து உயிரை விட்டவரை… போலீஸ் அடித்து உயிரிழந்ததாகக் கதை விட்டு… ஊடகம் கூப்பாடு போட்டு… என்ன இதெல்லாம்?!

madurai fake claim on police1 - 2025

மதுரை கருப்பாயூரணி பகுதியில் இயற்கையாக மயங்கி விழுந்து இறந்த மாமனாரை, போலீசார் அடித்ததால் அவர் உயிரிழந்துவிட்டார் என்று கூறிய அவரது மருமகன், பிரேத பரிசோதனைக்கு உடலைக் கொண்டு செல்ல முயன்றதால், வேறு வழியின்றி உண்மையை ஒப்புக் கொண்டு மன்னிப்பும் கேட்டார்.

மதுரை மாவட்டம் கருப்பாயூரணி முகமது சேட், அப் பகுதியில் கறிக்கடை நடத்தி வருகிறார். தமிழகம் முழு வதும் 144 தடை உத்தரவு அமலில் உள்ளது. ஆனால் அரசு கொடுத்த சலுகையை மீறி, கருப்பாயூரணியில் கடைகள் பல திறக்கப்பட்டதால், மக்கள் கூட்டம் அந்தப் பகுதியில் அலைமோதியது.

அப்போது அந்த வழியாக ரோந்து வந்த போலீசார், கடைகளை அடைக்கும்படி கூறினர். அங்கிருந்த முகமது சேட், தன் கறிக்கடையை மூட தாமதம் செய்தார். கடையை விரைந்து பூட்டும்படி போலீசார் சத்தம் போட்டனர்.

இந்நிலையில், கடைக்கு வெளியே நின்றிருந்த முகமதுசேட்டின் மாமனார் அப்துல் ரஹீம் (75), திடீரென மயக்கம் போட்டு கீழே விழுந்தார். அவரை பரிசோதித்தபோது, அவர் இறந்துபோனது தெரியவந்தது.

ஆனால், கறிக்கடை முகமதுசேட் மற்றும் அவரது உறவினர்கள் ஒன்று திரண்டு, போலீசார் அடித்ததால்தான் அப்துல்ரஹீம் உயிரிழந்துவிட்டார் என்று கூறி சாலை மறியலில் ஈடுபட்டனர்.

இதை அடுத்து அங்கே போலீசார் (குவிக்கப் பட்டனர். செய்தி சேகரிக்கச் சென்ற நிருபர்களிடமும், கறிக்கடை முகமதுசேட் உறவினர்கல், “போலீசார் அடித்ததால்தான் அப்துல் ரஹீம் உயிரிழந்தார்’ என்று பேட்டி அளித்தனர்.

அப்போது டிஎஸ்பி தலைமையிலான போலீசார் அங்கே வந்தனர். “போலீசார் அடித்ததில் இறந்தார் என்று நீங்கள் கூறினால், உடனடியாக புகார் ஒன்று கொடுங்கள். நாங்கள் வழக்குப்பதிவு செய்து, உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைக்க வேண்டும்” என்று கூறினர்.

பிரேத பரிசோதனை என்றதும் பதறிய முகமதுசேட், “போலீ சார் அடித்ததில் என் மாமனார் உயிரிழக்கவில்லை. அவர் திடீரென மயங்கி விழுந்துதான் உயிரிழந்தார். போலீசார் என் கடையை அடைக்கச் சொல்லி மிரட்டியதால், நான் அவ்வாறு கூறினேன்” என்றார்.
இதை அடுத்து, அவர் சார்ந்த ஜமாத்தார் முன்னிலையில் இதனை எழுதிக் கொடுத்து விட்டு, முகமது சேட் தன் மாமனார் அப்துல் ரஹீம் உடலை பெற்றுக் கொண்டார்.

இவ்வளவு நடந்த பின்பும், காலை முதலே ஊடகங்களில் போலீசார் அடித்ததில் கறிக்கடை முகமது சேட்டின் மாமனார் அப்துல் ரஹீம் உயிரிழந்தார் என்று, சம்பந்தப் பட்ட நபர் சொன்னதை மட்டுமே உண்மையான செய்தியாக எண்ணி தொடர்ந்து ஒளிபரப்பிய நிலைமையில் தமிழக ஊடகங்கள் உள்ளனவே என்று பொதுமக்கள் வாட்ஸ் அப் உள்ளிட்ட சமூகத் தளங்களில் திட்டியபடி பதிவுகளைப் போட்டுக் கொண்டிருந்தனர் .

https://twitter.com/KalyanBJP/status/1247468211399839744

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Hot this week

பஞ்சாங்கம் டிச.06 – சனிக் கிழமை | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய தினம் நல்ல நாளாக அமைய எமது வாழ்த்துகள்.

பஞ்சாங்கம் டிச.05 – வெள்ளி | இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரு ராசிகளுக்குமான இன்றைய பலன்கள், திருக்குறள், நற்சிந்தனை

ராஜபாளையம் அய்யனார்கோயில் ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பு; சிக்கிய பக்தர்கள் மீட்பு!

ராஜபாளையம் மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் வியாழக்கிழமை பெய்த திடிர் மழை...

மீண்டும் இன்று… பரன்குன்று மலை உச்சி தீபத் தூணில் தீபம் ஏற்ற உத்தரவு!

திருப்பரங்குன்றத்தில் 144 தடை உத்தரவு ரத்து செய்யப்பட்டதுடன், உடனடியாக மலை உச்சியில் தீபத்தூணில் தீபம் ஏற்ற நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு பிறப்பித்திருக்கிறார்.

திருப்பரங்குன்றம் விவகாரத்தில் திமுக., அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி!

திருப்பரங்குன்றம் வழக்கு விவகாரத்தில் தமிழக அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

Topics

சட்டத்தை மதிக்காத தமிழக அரசு, அதிகாரிகள்; இந்து விரோத இந்து சமய அறநிலையத் துறை; திமுக.,!

நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக, இந்துக்களுக்கு எதிராக 144 தடை உத்தரவு பிறப்பித்து, அடக்குமுறையை கையாண்டு கலவரத்தை தூண்டியது காவல்துறை.

பஞ்சாங்கம் டிச.04 – வியாழன்| இன்றைய ராசி பலன்கள்!

இன்றைய பஞ்சாங்கம், பன்னிரண்டு ராசிகளுக்கும் உள்ள இன்றைய ராசிபலன்கள், திருக்குறள், சிந்தனைகள்....

ராஜபாளையம்-கொலை வழக்கில் கைதான இருவர் குண்டர் சட்டத்தில் கைது…

ராஜபாளையம் அருகில் தேவதானம் நச்சாடை தவிர்த்தருளிய சுவாமி கோயில் காவலர்கள் இருவர்...

Entertainment News

Popular Categories