பகலில் காரில் டிப்டாப் உலா.. இரவில் கொடூர கொள்ளை..!

Published:

Burglar theft house - 2026

பகலில் காரில் உலா வருவது… இரவில் கொள்ளையடிப்பது… என்று ஹைதராபாத் நகரத்தில் தொடர் திருட்டுகளில் ஈடுபட்ட குற்றவாளியை போலீசார் கைது செய்து, 72 சவரன் தங்கம், கார், 2 டிவிகள், 4 லட்சம் பணம் ஆகியவற்றைக் கைப்பற்றினர்.

ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ்பகவத் வெள்ளிக்கிழமை நாகோலில் உள்ள கேம்ப் அலுவலகத்தில் செய்தியாளர்களிடம் பேசிய போது தெரிவித்ததாவது….

ஆந்திர பிரதேசத்திலுள்ள ஸ்ரீகாகுளம் மாவட்டத்தைச் சேர்ந்த போலகீ அப்பல நாயுடு (41), ராஜேந்திரா நகரில் உள்ள கிஸ்மத்பூரில் வசித்து வருகிறான். டிரைவராக பணிபுரிந்து வரும் அவன் பகல் வேளையில் காரில் சுற்றிய படியே காலனிகளை நோட்டமிட்டுக் கொண்டு இரவு நேரங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்தான்.

1999- 2012 நடுவில் ஹைதராபாத் கமிஷனரேட் எல்லையில் 18 இடங்களோடு கூட ராச்சகொண்டா கமிஷனரேட்டை சேர்ந்த சைதன்யபுரி டாணா எல்லைகளிலும் திருட்டு குற்றம் செய்து சிறைக்கு சென்று வந்துள்ளான் அதன்பின் 2019 ல் இருந்து 2020 மார்ச் வரை மீர்பேட்டைச் சேர்ந்த காவல்நிலைய எல்லையில் 24 தொடர் திருட்டுகளில் ஈடுபட்டு உள்ளான். எல்பிநகர் டாணா எல்லையிலும் குற்றம் புரிந்துள்ளான். க

ுற்றவாளியை தொழில்நுட்ப உதவியோடு கைது செய்த போலீசார் அவனிடமிருந்த செல்வத்தை கைப்பற்றியுள்ளனர். தற்போதுள்ள சூழ்நிலையில் மருத்துவ பரிசோதனைக்கு பின்பு ரிமாண்டுக்கு அனுப்புவார்கள்.

ALSO READ:  இடதுசாரிகளின் இரட்டை வேடம்: தியானமென் சதுக்கமும் ஜன்தர்மந்தரும்!

குற்றவாளியின் குற்றங்களை கட்டுப்படுத்திய போலீசாருக்கு காவல் ஆணையர் பணம் அன்பளிப்பு அளித்து உற்சாகம் அளித்துள்ளார். கூட்டத்தில் எல்பிநகர் டிசிபி சன்ப்ரீத்சிங், வனஸ்தலிபுரம் ஏசிபி ஜெயராம், மீர்பேட் போலீஸ் அதிகாரிகள் பங்கு பெற்றார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img