குழந்தைகள் ஆபாச வதை படங்கள் மற்றும் வீடியோ தேடல் மீண்டும் சென்னையில் அதிகரித்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளன. குழந்தைகள் வதை வீடியோக்களை வெளியிடுவோரை போலீசார் தேடி வருகின்றனர்.
குழந்தைகள் வதை ஆபாச வீடியோக்கள் தொடர்பாக தமிழகத்தில் சில மாதங்களுக்கு முன்பு கைது நடவடிக்கைகள் பாய்ந்தன. இதனால், போலீஸ் மற்றும் சமூகத்துக்கு பயந்து இதுபோன்ற படங்களைப் பார்ப்பது, மற்றவர்களுக்கு பகிர்வது குறைந்தது. ஆனால், ஊரடங்கு நேரத்தில் தற்போது இதுபோன்ற குற்றச்செயல்கள் அதிகரித்துள்ளன.
இந்தியன் சைலட் ப்ரொடக்ஷன் ஃபண்ட் என்ற நிறுவனம் வெளியிட்டுள்ள ஆய்வறிக்கை படி, ஊரடங்கு காலத்தில் ஆபாச படங்கள் பார்ப்பது மற்றும் குழந்தைகள் ஆபாச படங்கள், வீடியோ தேடுவது அதிகரித்துள்ளது.
இந்தியாவில் 100 நகரங்களில் மேற்கொள்ளப்பட்ட ஆய்வில் சென்னை மற்றும் ஒடிஷா தலைநகர் புவனேஷ்வரில் குழந்தைகள் ஆபாச படங்கள் அதிக அளவில் தேடப்பட்டது தெரியவந்துள்ளது.
இது தவிர பெருநகரங்கள், லக்னோ, ஆக்ரா, சிம்லா, திருவனந்தபுரம் உள்ளிட்ட நகரங்களிலும் குழந்தைகள் ஆபாச வதை வீடியோ, படங்கள் தேடுவது அதிகரித்துள்ளது.
இந்த ஆய்வறிக்கை அடிப்படையில் குற்றவாளிகளைத் தேடும் பணியும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.
குழந்தைகள் தொடர்பான தவறான படங்கள், வீடியோக்களை பார்ப்பது, வைத்திருப்பது மற்றவர்களுடன் பகிர்வது சட்டரீதியாக குற்றமாகும். எனவே, இவற்றைத் தவிர்க்கும்படி போலீசார் எச்சரிக்கைவிடுத்தள்ளனர்