கொரோனா: ஈரோடு அரசு மருத்துவமனையில் 20 வயது இளைஞர் உயிரிழப்பு!

இந்தியா பொது தகவல்கள்
dead body 5 - 2026

உலக நாடுகளை அச்சுறுத்தி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்தியாவிலும் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் கொரோனா பாதித்தோர் எண்ணிக்கை 1,477ஆக உயர்ந்துள்ளது. தமிழகத்தில் அதிகபட்சமாக சென்னையில் நேற்று ஒரே நாளில் 50 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது.

இந்நிலையில் ஈரோட்டில், அரசு தலைமை மருத்துவமனையின் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்டிருந்த 20 வயது இளைஞர் உயிரிழந்துள்ளார். ஆனால் அவரின் ரத்த மாதிரி பரிசோதனை முடிவு இதுவரை வெளியாகவில்லை.

முன்னதாக நேற்று கடலூர் மற்றும் ஈரோட்டில் கொரோனா வார்டில் அனுமதிக்கப்பட்ட இருவர் உயிரிழந்தனர். கடலூர் மஞ்சக்குப்பத்தை சேர்ந்த 75 வயது முதியவர் உயிரிழந்த நிலையில் ஈரோட்டில் பி.பி.அக்ரஹாரம் பகுதியை சேர்ந்த மற்றொரு 75 வயதான முதியவர் ஒருவரும் இறந்துள்ளார். இருப்பினும் இவர்களின் ரத்த பரிசோதனை முடிவுகளும் இன்னும் வரவில்லை.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.