
இந்தியாவில் கொரோனா அதிகம் பாதிக்கப்பட்டுள்ளன நகரமாக மும்பை உள்ளது. பல பிரபலங்கள் வேட்டை விட்டு வெளியே செல்ல பயன்படுவதால் வீட்டிலேயே முடங்கியுள்ளனர்.
இந்திய கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் ஒரு நெகிழவைக்கும் பதிவை வெளியிட்டுள்ளார். குழந்தைகளுடன் விளையாடுவதாக இருந்தாலும், அவர்களுடன் ஜிம்மில் பயிற்சி செய்வதாக இருந்தாலும், அல்லது தலை முடியை வெட்டிவிடுவதாக இருந்தாலும் சரி. “ஒரு தந்தையாக அனைத்தையும் செய்ய வேண்டும். இந்த ஹேர்கட் ஸ்டைல் உன்னை மேலும் அழகாக மாற்றும் அர்ஜுன் என தனது மகனை குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக ஊரடங்கால் வீட்டிற்குள் முடங்கியிருந்த சச்சின் தனக்கு தானே ஹேர் ஸ்டைலிஸ்டாக மாறினார். இது தொடர்பாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் சச்சின் வெளியிட்டிருந்த பதிவில், “ஸ்குயர் கட் விளையாடுவது முதல் எனது ஹேட் கட் செய்வது முதல் அனைத்தையும் ரசித்து செய்கிறேன்.
கிரிக்கெட் உலகின் ஹீரோவாக சச்சின் டெண்டுல்கர் பார்க்கப்பட்டாலும் தன் தோளுக்கு மேல் வளர்ந்த தன் பிள்ளையை கவனித்துக் கொள்வதில் அவர் ஒரு தந்தையாக ஹீரோவாக வாழ்ந்து கொண்டிருக்கிறார். பல ரசிகர்கள் பிரபலங்கள் என அவருடைய பதிவை சமூக வலைத்தளங்களில் பகிர்ந்துள்ளனர்.