ரவுடிகளை பிடிக்க சென்ற காவல் ஆய்வாளர் உட்பட 8 பேரை சுட்டு கொலை! தப்பிய கும்பல்!

Published:

up

உத்தரப்பிரதேசம் மாநிலம் கான்பூரில் ரவுடி ஒருவரை கைது செய்ய போலீசார் சென்ற போது ரவுடிகள் நடத்திய தாக்குதலில் டிஎஸ்பி, காவல் ஆய்வாளர் உள்பட 8 போலீசார் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். மேலும் 4 போலீசார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கான்பூர் மாவட்டத்தில் உள்ள சவுபேபூர் சரகத்துக்கு உட்பட்ட திக்ரு கிராமத்தி பல வழக்குகளில் தேடப்பட்டு வந்த ரவுடி விகாஸ் துபே பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்துள்ளது.

இவர் மீது கொலை, கொள்ளை என சுமார் 60 வழங்குகள் நிலுவையில் உள்ளன. சமீபத்தில் கொலை முயற்சி வழக்கில் தேடப்பட்டு வந்த விகாஸ் துபேவை கைது செய்ய போலீசார் திக்ரு கிராமத்துக்கு நேற்று இரவு சென்றுள்ளனர். கிராமத்துக்கு போலீசை வரவிடாமல் தடுக்க பல தடைகளை வழி முழுவதும் ரவுடிகள் போட்டதாக கூறப்படுகின்றது.

up

அவரை பிடிக்கவும், வீட்டில் சோதனை நடத்தவும் 16 பேர் கொண்ட போலீஸ் குழு அவரது வீட்டிற்கு சென்றது. அப்போது ஒரு கட்டிடத்தின் மேல் ஏறி நின்றிருந்த துபேவின் ஆட்கள் ஜேசிபியை சாலையின் நடுவழியில் நிறுத்தை போலீசாரை மறைத்தனர்.

அவற்றை எல்லாம் தாண்டி ஊருக்கு உள்ளே சென்ற போது, மாடியில் பதுங்கி இருந்த ரவுடிகள் சிலர் போலீசாரை கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டு தாக்கியுள்ளனர்.

ALSO READ:  சதுர்த்திக்கு சுதேசி, மண் பிள்ளையாரையே வாங்குங்கள், விற்பனை செய்யுங்கள்: பிரதமரின் அறைகூவல்!

திடீரென போலீசார் மீது அக்கும்பல் துப்பாக்கிச்சூடு நடத்தியது. இந்த கோர சம்பவத்தில் ஒரு டிஎஸ்பி, 3 சப் இன்ஸ்பெக்டர்கள் மற்றும 4 காவலர்கள் கொல்லப்பட்டனர். 4 காவலர்கள் படுகாயம் அடைந்தனர்.

up

இதில் டிஎஸ்பி தேவந்திர மிஸ்ரா, காவல் ஆய்வாளர் பில்ஹார் உள்பட 8 போலீசார் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், 4 போலீசார் காயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

காயம் அடைந்த அனைவரும் உடனடியாக அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களின் நிலை கவலைக்கிடமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

முன்னதாக போலீஸ் வருதை முன்கூட்டிய குற்றவாளிகள் அறிந்திருந்ததுடன், எச்சரிக்கையாக இருந்துள்ளனர். போலீஸ் குழு வந்த போது அவர்களை திட்டமிட்டு சரமாரியாக தாக்கிவிட்டு அந்த குழு அங்கிருந்து தப்பி சென்றுள்ளது.

up

போலீசார மீது தாக்குதல் நடந்த உடனேயே, எஸ்.எஸ்.பி தினேஷ்குமார், எஸ்.பி. (மேற்கு) டாக்டர் அனில் குமார் மற்றும் மேலும் மூன்று எஸ்.பிக்கள். தலைமையில் ஏராளமான போலீசார் சம்பவ இடத்தை அடைந்தனர்.

கன்னூஜ் மாவட்டத்தைச் சேர்ந்த போலீசார் விரைந்து சம்பவ இடத்துக்கு வந்துள்ளனர். ஆனால் அங்கிருந்த ரவுடிகள் அனைவரும் தப்பிவிட்டதாக கூறப்பட்டுள்ளது.

ALSO READ:  சாதனை நாயகர், நீண்டகால பிரதமர்: நரேந்திர மோடியின் அசத்தல் சாதனைகள்!

சம்பவ இடத்தில் விசாரணை நடத்தும் போலீசார்
இந்த துப்பாக்கிச் சூடு சம்பவம் குறித்து பேசியுள்ள உத்தரபிரதேச டிஜிபி ஹெச்.சி.அஸ்வதி, “ரவுடி துபேயை கைது செய்ய தான் போலீசார் அங்கே சென்றுள்ளனர். ஆனால் ரவுடிகள் துப்பாக்கி கொண்டு தாக்குதல் நடத்துவார்கள் என எதிர்பார்க்கவில்லை. தாக்குதல் நடத்திய ரவுடிகளை பிடிக்க சிறப்பு அதிரடிப்படை அமைக்கப்பட்டுள்ளது.” என்று கூறியுள்ளார். உத்தரபிரதேச மாநிலத்தின் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் உயிரிழந்தவர்களுக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

Related articles

Recent articles

spot_img