‘கொரோனா கொன்ற மனிதம்’: உடல்நலம் குன்றி இறந்த மனிதர்! இறுதிச் சடங்கை தடுத்த கிராமத்தினர்!

Published:

corona last rites
corona last rites
  • ‘கொரோனா கொன்ற மனிதம்
  • உடல்நலம் குன்றி இறந்த மனிதர்!
  • இறுதிச் சடங்கை தடுத்த கிராமத்தினர்!

கொரோனா மனிதர்களிடையே விலகலை மிக அதிகமாக வளர்ந்து வருகிறது. மனிதத்தன்மை மறந்துபோன மக்களிடம் நல்ல குணமே அரிதாகிவிட்டது. இறந்தவர்களிடம் கௌரவ மரியாதை இன்றி நடந்துகொள்கிறார்கள்.

உடல்நிலை சரியின்றி இறந்த மனிதரின் அந்திம கிரியை நடத்துவதற்கு கிராமத்தார் தடை கூறினார்கள். இப்படிப்பட்ட மனிதத் தன்மையற்ற சம்பவம் சித்தூர் மாவட்டத்தில் நடந்தேறியது.

சித்தூர் மாவட்டம் மதனப்பள்ளி கிராமீண மண்டலம் வலசபல்லெ என்ற கிராமத்தில் ஒருவர் சுவாசம் தொடர்பான நோயால் சிரமப்பட்டு வந்தார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகையில் அவருக்கு மேலான மருத்துவம் செய்வதற்காக திருப்பதி மருத்துவமனைக்கு எடுத்துச் செல்கையில் வழியிலேயே இறந்து போனார்.

அதனால் இறந்த உடலை சொந்த கிராமத்துக்கு எடுத்து வந்த குடும்பத்தார் ஞாயிறன்று அந்திமக் கிரியைகள் செய்வதற்கு ஏற்பாடு செய்தார்கள்.

ஆனால் அந்த மனிதரை கிராமத்தில் புதைப்பதற்கு இடம் கொடுக்க மாட்டோம் என்று உள்ளூர்வாசிகள் தடுத்தார்கள். அதோடுகூட பக்கத்திலுள்ள ஐந்து கிராமத்தாரும் அவர்களுக்கு துணை போனதால் அந்திமக் கிரியைகளை நிறுத்தி வைத்தார்கள்.

ALSO READ:  ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் ஆடிப்பூர தேரோட்டம் கோலாகலம்!

கொரோனாவால் தான் அவர் இறந்து இறந்து விட்டார் என்று குற்றம்சாட்டி புதைப்பதற்கு மறுப்பு தெரிவித்தார்கள். அதனால் வேறு வழியின்றி இறந்த உடலுக்கு கொரோனா பரிசோதனை நிர்வகித்து அதன்பின் அந்திமக் கிரியைகள் செய்வதற்கு குடும்பத்தார் ஒப்புக் கொண்டனர்.. இதுகுறித்து மருத்துவ உதவியை நாடியுள்ளார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img