அனுபவத்தால் தான் திறமை, நிபுணத்துவம் வளரும்: பிரதமர் மோடி!

இந்தியா உரத்த சிந்தனை சற்றுமுன் சுய முன்னேற்றம் லைஃப் ஸ்டைல்
modiji
modiji

நேற்று உலக இளைஞர் ஸ்கில் தினத்தை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றுகையில் நிபுணத்துவம் என்பது ஆத்ம திருப்தியை சாதித்து அளிக்கிறது என்றார்.

நிபுணத்துவத்தை அப்போதைக்கப்போது வளர்த்துக் கொண்டே இருக்க வேண்டுமென்றார்.

உலகம் வேகமாக மாறி வருகிறது. வியாபாரங்கள், மார்க்கெட்டிங் அனைத்தும் தினம் தினமும் அதன் பாதிப்புக்கு உள்ளாகிறது. கொரோனா தொற்றுநோயின் பரவல் பின்னணியில் நிபுணத்துவம் என்பது மிகவும் முக்கியமானது என்றும் இப்படிப்பட்ட சமயத்தில்தான் இளைய சமுதாயம் தம் திறமையை கூர்மையாக்கிக் கொள்ள வேண்டும் என்றும் கூறினார்.

ஐந்தாவது ஸ்கில் இந்தியா ஆண்டு நிறைவை முன்னிட்டு பிரதமர் மோடி உரையாற்றினார்.

உலக இளைஞர் நிபுணத்துவ தின கொண்டாட்டங்களை முன்னிட்டு பிரதமர் மோடி நாட்டு இளைஞர்களுக்கு வாழ்த்து தெரிவித்தார்.

கொரோனா பெருந்தொற்றினால் பணிகளின் நடைமுறை மாறிப் போய்விட்டது என்றும் டெக்னாலஜி கூட மாறி வருகிறது என்றும் அதனால் மாறி வரும் சூழ்நிலைக்கு ஏற்ப இளைய சமுதாயம் நிபுணத்துவத்தை முன்னேற்றிக் கொள்ள வேண்டும் என்றும் மேம்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் மோடி தெரிவித்தார்.

நிபுணத்துவம் என்பது நமக்கு நாமே அளித்துக் கொள்ளும் பரிசு என்றும் அது அனுபவத்தால் வளரும் என்றும் நாட்கள் கடக்க கடக்க நிபுணத்துவம் அனுபவத்தால் வளரும் என்றும் மோடி கூறினார்.

திறமை என்பது மிகவும் சிறப்பான தன்மை கொண்டது. இது பிறரில் இருந்து நம்மை வேறுபடுத்திக் காட்டுகிறது.

ஞானம், நிபுணத்துவம் இரண்டுக்கும் இடையில் சிலருக்கு எப்போதும் குழப்பம் ஏற்படுகிறது என்றும் பிரதமர் கூறினார்.

புத்தகங்களில் படித்து இன்டர்நெட்டில் தேடி எவ்வாறு சைக்கிள் ஓட்டுவது என்பதை தெரிந்துகொள்ளலாம். இதனை நாம் நாலெட்ஜ் என்று கூறுவோம். ஆனால் அந்த ஞானம் இருந்தால் மட்டுமே சைக்கிள் ஓட்டுவதற்கு கியாரன்டி இருக்காது என்றார்.

உண்மையில் சைக்கிள் ஓட்ட வேண்டும் என்றால் நமக்கு ஸ்கில் இருக்க வேண்டும் என்ற பிரதமர் ஒரு உதாரணம் கொடுத்தார். ஏதாவது புதிய நிபுணத்துவம் கற்றுக்கொள்ள வேண்டுமென்ற தேடல், தவம் இல்லாவிட்டால் வாழ்க்கையே அதோடு நின்று விடும். அதனால் அவனுடைய வாழ்க்கையே ஒரு பாரமாக மாறிப்போகும் என்று மோடி குறிப்பிட்டார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.