இளைஞர்கள் திருக்குறளைப் படித்து திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும்: மோடி

Published:

modiji
modiji

பிரதமர் மோடி திருக்குறளை புகழ்ந்து தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். பிரதமர் மோடி தனது டுவிட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

தெய்வப் புலவர் திருவள்ளுவரின் எழுத்துக்கள், நம்பிக்கையும் ஒளியும் பரப்பிடும் வல்லமை வாய்ந்தவை. இந்தியா முழுதிலுமுள்ள இளைஞர்கள் பலரும் திருக்குறளைப் படித்துப் பயனுருவர் என நம்புகிறேன்.

திருக்குறள் அதி அற்புதமான ஊக்குவிப்பு நூலாகும். உயரிய சிந்தனைகள், உன்னதக் குறிக்கோள்கள், ஊக்கம் தரும் கருத்துக்களை உள்ளடக்கிய பொக்கிஷமாகும்.

இவ்வாறு பிரதமர் மோடி டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

பிரதமர் மோடி அடிக்கடி தனது பேச்சின்போது திருக்குறளை மேற்கோள் காட்டுவார். சமீபத்தில் லடாக்கில் ராணுவ வீரர்ககள் இடையே பேசும்போது

‘‘மறமானம் மாண்ட வழிச்செலவு தோற்றம்
எனநான்கே ஏலம் படைக்கு’’ என்ற திருக்குறளை குறிப்பிட்டிருந்தார்.

ALSO READ:  வ.வே.சு என்னும் சுதந்திர வீர விளக்கு அணைந்த தினம் இன்று!

இதற்கு ‘‘வீரம், மானம், நல்ல வழியில் நடத்தல், அரசின் நம்பிக்கைக்கு உரியவராதல் எனும் நான்கும் கடைக்கு காவல் அரண்கள்’’ எனப் பொருள்படும்

Related articles

Recent articles

spot_img