amutha-ias

தமிழகத்தை சேர்ந்த அமுதா ஐஏஎஸ் பிரதமர் அலுவலகத்தின் இணைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாம் மற்றும் மறைந்த முன்னாள் தமிழக முதல்வர் ஜெயலலிதா ஆகியோரின் இறுதிச் சடங்கு ஏற்பாடுகளையும் அமுதா பொறுப்பேற்று நடத்தியுள்ளார்.

அமுதா தற்போது உத்தரகாண்ட் மாநிலத்தில் உள்ள மசூரியில் உள்ள ஐஏஎஸ் அகாதமியில் விரிவுரையாளராக பணியாற்றி வருகிறார்.
மதுரையை சேர்ந்த அமுதா 1994ஆம் ஆண்டு ஐ.ஏ.எஸ் தேர்ச்சி பெற்றார். திமுக, அதிமுக, ஆகிய இரண்டு ஆட்சிகளிலும் பல்வேறு துறைகளில் பணியாற்றிய இவர், தமிழக உணவு பாதுகாப்புத்துறை ஆணையராகவும் பணியாற்றியுள்ளார்.

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழகத்தை சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்டத்தை சேர்ந்த அமுதா, கடந்த 1994ம் ஆண்டு கடலூர் சார் ஆட்சியராக தனது ஐஏஎஸ் பணியை தொடங்கினார். இதைத்தொடர்ந்து, ஈரோடு மாவட்ட கூடுதல் ஆட்சியராகவும், தருமபுரி உள்ளிட்ட மாவட்டங்களில் ஆட்சியராகவும் அவர் பணியாற்றினார்.

ALSO READ:  மதுரை மீனாட்சி அம்மன் கோயில் கும்பாபிஷேகம்; நகரில் போக்குவரத்து மாற்றம்!

திமுக, அதிமுக, ஆகிய இரண்டு கட்சிகளின் ஆட்சிகளிலும் உணவு பாதுகாப்புத் துறை ஆணையர் உள்பட தமிழக அரசின் பல்வேறு துறைகளில் முக்கிய பொறுப்புகளையும் அமுதா வகித்துள்ளார்.

2015-ல் சென்னை பெரு வெள்ளத்தின்போது, வெள்ள பாதிப்புகளை சரி செய்யும் சிறப்பு அதிகாரியாக அமுதா நியமிக்கப்பட்டார். அப்போது, ஆக்கிரமிப்புகளை அதிரடியாக அகற்றி, சிறப்பாக பணியாற்றிய அமுதா ஐஏஎஸ், அனைத்து தரப்பினராலும் பாராட்டப்பட்டார்.

நேர்மையான அதிகாரியாக மக்களின் அன்பைப் பெற்ற அமுதாவுக்கு, தற்போது, உத்தரகாண்டில் உள்ள முசோரி ஐ.ஏ.எஸ் அகாடமியில் விரிவுரையாளராக பணியாற்றி வரும் அமுதாவுக்கு, பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக பதவி வழங்கப்பட்டுள்ளது. இவர், மட்டுமல்லாமல் 16 ஐஏஎஸ் அதிகாரிகள் பலதுறைகளில் இணைச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending