காட்டு பன்றிகளை கொல்ல வைத்த வெடி! பசு உயிரிழப்பு!

Published:

cow-mysore

மைசூரில் காட்டு பன்றிகளை கொல்வதற்காக தீவனத்தில் வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டை சாப்பிட்ட பசு வாயில் வெடிகுண்டு வெடித்து இறந்தது. கேரளாவில் யானை இதேபோன்று வெடிகுண்டு சாப்பிட்டதில் இறந்து சில நாட்களிலேயே நடந்த இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கேரள மாநிலம் கைசூரில் கோடே பகுதியில் பெட்டதாபீடு என்ற கிராமத்தைச் சேர்ந்தவர் நரசிம்ம கவுடா. இவரது வீட்டு பசுவுக்குத்தான் இந்த பாதிப்பு ஏற்பட்டு இருக்கிறது. பசுவுக்கு ஆறு வயதாகிறது.

இதுகுறித்து விலங்குகள் நல ஆர்வலர் பாக்கியலட்சுமி அளித்திருக்கும் பேட்டியில், ”தீவனம் சாப்பிடும்போது வெடிகுண்டு வெடித்ததில் பசுவின் வாயில் நாக்கு மற்றும் குரல்வளை பெரிய அளவில் பாதிக்கப்பட்டுள்ளது. சாப்பிடும்போது வாயில் வெடிகுண்டு வெடித்தால் எந்தளவிற்கு பாதிப்பு ஏற்படுத்தும் என்பதை நினைத்துக் கூட பார்க்க முடியவில்லை” என்றார்.

இறைச்சிக்காக பன்றியை கொல்வதற்கு வைக்கப்பட்டு இருந்த தீவனத்தை பசு சாப்பிட்டதால் இந்த ஆபத்து ஏற்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது. பசு வாயில் வெடிகுண்டு வெடித்த சத்தம் கேட்டு நரசிம்ம கவுடா ஓடிச் சென்று பார்த்தபோது, பசுவின் வாயில் ரத்தம் வடிந்து கொண்டுள்ளது.

இதுகுறித்து கவுடா கூறுகையில், ”புதருக்கு அருகே தீவனம் சாப்பிட சென்றபோது வெடிகுண்டு வாயில் வெடித்தது. வெடிகுண்டு வாயில் வெடித்ததில் வாய் சிதறியது. எனது உறவினர் இதுகுறித்து என்னிடம் கூறினார். நான் ஓடிச் சென்று பார்த்தேன். உடனடியாக சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், காப்பாற்றிக் கொள்ள முடியவில்லை.

ALSO READ:  சபரிமலையில் நிறை புத்தரிசி பூஜை: கொட்டும் மழையில் குவிந்த பக்தர்கள்!

விலங்குகளுக்கான மக்கள் அமைப்பு சார்பில் கால்நடை மருத்துவர் அமர்தீப் சிங் சிகிச்சை அளித்தார். காயம் பெரியளவில் ஏற்பட்டு இருந்த காரணத்தினால், காப்பாற்ற முடியவில்லை என்று மருத்துவர் கூறியுள்ளார். இதுகுறித்து போலீசில் புகார் அளிக்கப்போவதாக கவுடா தெரிவித்துள்ளார்.

கேரள மாநிலத்தில் பாலக்காட்டில் கடந்த மே மாதம் கருவுற்ற யானை ஒன்று அன்னாசி பழம் சாப்பிட்டது. அப்போது அதில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த வெடிகுண்டு வெடித்து யானை இறந்தது. இது தேசிய அளவில் சோகத்தை ஏற்படுத்தி இருந்தது. பெரிய அளவில் கண்டனங்கள் எழுந்தன. இந்த சோகம் மனதை விட்டு நீங்குவதற்குள் இந்த சோகம் நடந்துள்ளது.

ALSO READ:  கர்கடக மாத பூஜைக்காக ஜூலை 16ல் சபரிமலை நடை திறப்பு!

Related articles

Recent articles

spot_img