குடிச்சிட்டு வண்டி ஓட்டி, பிடிச்ச போலீஸுக்கு முத்தம் கொடுத்த கோல்கத்தா பெண்!

இந்தியா சற்றுமுன்
Kolkata traffic cop - 2026
A constable traffic policeman directing taxis Calcutta Kolkata India ( Representative Image)

கோல்கத்தா:

கோல்கத்தாவில் குடித்துவிட்டு வாகனம் ஓட்டிய பெண்ணை தடுத்து நிறுத்திய போலீஸ்காரருக்கு அந்தப் பெண் முத்தம் கொடுத்து கலாட்டா செய்துள்ளார்.

மேற்கு வங்க மாநிலம் கோல்கத்தாவில், புதன் நள்ளிரவில் பெண் ஒருவர் இரவு விருந்தில் கலந்து கொண்டுவிட்டு முழு போதையில் வீடு திரும்பியுள்ளார், போதையின் காரணத்தால் அவரால் வண்டியை ஒழுங்காக ஓட்ட முடியவில்லை. சால்ட் லேக் அருகே கிழக்கு மெட்ரோபாலிட்டன் சாலையில் சிங்க்ரிஹெட்டா க்ராஸிங் அருகே வந்த போது, அந்தப் பெண் வண்டியை ஓட்டிய நிலையில் மயக்க நிலைக்குச் சென்றார். இதனால் வண்டி அங்கிருந்த தடுப்புச் சுவர் மீது மோதியது.

அருகில் இருந்த டாக்ஸி ஓட்டுநர் அவரைக் காப்பாற்ற முயன்றார். ஆனால் அப்பெண் ஓட்டுநரைப் பிடித்துத் தள்ளிவிட்டார். அப்போது, போலீஸ் ஒருவர் அந்தக் காரில் பார்த்துள்ளார். அந்தப் பெண்ணும், அவரது நண்பர்கள் இருவரும் காரில் இருந்தனர். ஒரு பெண்ணும் ஒரு ஆணுமாய் காருக்குள் இருந்த இருவரும் குடித்து போதையில் தள்ளாடினர். அவர்கள் இருவரையும் காரில் இருந்து இறக்க முயற்சி செய்தபோது, அந்தப் பெண் செய்த செயலால் போலீஸ் கான்ஸ்டபிளுக்கு என்ன செய்வதென்றே தெரியவில்லை. அந்தப் பெண், கான்ஸ்டபிளை தன் பக்கம் இழுத்து, இறுக்கிக் கட்டிப் பிடித்து, முத்த மழை பொழிந்துள்ளார்.

அப்போது அருகே நின்றிருந்த இன்னொரு கான்ஸ்டபிள், அந்தப் பகுதியில் இருந்த ஒரு பெண்ணைத் துணைக்கு அழைத்து, தன் சக போலீஸ்காரரைக் காப்பாற்றி அழைத்துச் சென்றுள்ளார். இதை அடுத்து, காரில் வந்த மூவரும் பிடாநகர் தெற்கு காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். கண்மூடித்தனமாக, மது அருந்தி வண்டி ஓட்டிய குற்றத்திற்காக அப்பெண் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. காரில் வந்த அவரின் நண்பர்கள் இருவர் மீதும், முறைதவறி நடந்து கொண்டதாக வழக்கு பதியப் பட்டது.

உடன் வந்த போலீஸ்காரர், “அந்தப் பெண் முத்தம் கொடுத்தல் எனும் வகையில் லஞ்சம் கொடுத்து தப்பிக்கப் பார்த்தார் என்றும் கூட வழக்கு பதிவு செய்யலாம்தான்” என்று நகைச்சுவையாகக் கூறியுள்ளார். இது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.