mother-feed

மகாராஷ்டிராவின் தானே மாவட்டத்தின் பிவாண்டி நகரில் 23 வயது பெண் குழந்தைக்கு பால் கொடுக்க மறுத்ததால் 25 வயது கணவனால், கொலை செய்யப்பட்டார்.

மும்பையை சேர்ந்த பஜன் சிங், புஜா தம்பதி தங்கள் ஒரு வயது குழந்தையுடன் வசித்து வந்தனர். சம்பவத்தன்று, குழந்தை அழுது கொண்டிருந்த போது புஜா தாய்ப்பால் கொடுக்க மறுத்துவிட்டதாக கூறப்படுகிறது.

இதனால் இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. ஒரு கட்டத்தில் ஆத்திரமடைந்த பஜன் சிங், இரும்பு கம்பியை வைத்து மனைவியை கடுமையாக தாக்கியுள்ளார்.

இதனால் படுகாயமடைந்த மனைவி நினைவிழந்து கீழே விழுந்தார். பஜன் சிங் மருத்துவமனைக்கு மனைவியின் உடலை எடுத்துச் சென்று பாத்ரூமில் வழுக்கி விழுந்து விட்டதாக கூறியுள்ளார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதை அறிந்த மருத்துவர்கள் பூஜாவின் உடலில் காயங்கள் இருப்பதைக் கவனித்து சந்தேகம் உருவாகியது. மேலும், அவரது காயங்கள் புதியதாக இருந்தன. உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர்.

உள்ளூர் குருத்வாராவில் சிங் ஒரு வழக்கமான பார்வையாளர் என்பது போலீசாருக்குத் தெரியவந்தது. எனவே, அவர்கள் சீக்கிய கோவிலின் தலைவர் ஹர்ஜீத் குஜ்ராலிடம் சிங்கிற்கு ஆலோசனை வழங்குமாறு கேட்டார்கள். இதையடுத்து குஜ்ராலிடம் பேசிய பஜன் சிங் உடைந்து, தனது மனைவியைக் கொன்றதாக ஒப்புக்கொண்டார். இறந்து போன மனைவி குளியலறையில் கீழே விழுந்து இறந்தார் என்று கூறி வழக்கை திசை திருப்ப முயன்றதும் பின்னர் கண்டறியப்பட்டது.

ALSO READ:  திருச்சூரில் கோலாகலமாக நடைபெற்ற ‘ஆனையூட்டு’ நிகழ்வு!

இதையடுத்து நர்போலி போலீசார் சிங்கை காவலில் எடுத்து கொலை வழக்கு பதிவு செய்தனர்

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending