ஒரே மாதத்தில் 50 ‘ஆன்லைன்’ கூட்டங்கள்: பிரதமர் மோடி சாதனை!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
pm-modi-in-online-meeting
pm-modi-in-online-meeting

கொரோனா ஊரடங்கின் போது ஒரு மாத காலத்தில் 50க்கும் அதிகமான ஆன்லைன் கூட்டங்களை நடத்தியுள்ள பிரதமர் மோடி.

கொரோனா ஊரடங்குதல் காரணமாக தனது வீடு மற்றும் அலுவலகத்தில் மட்டுமே இருந்துவரும் பிரதமர் நரேந்திர மோடி, பொருளாதாரத்தை உயர்த்துவதற்காக கடந்த ஒரு மாதத்தில் பல்துறை அதிகாரிகளுடனும் 50 க்கும் மேற்பட்ட ஆன்லைன் கூட்டங்களை நடத்தியுள்ளார்.

இந்த கூட்டங்களில் பெரும்பாலானவை பொருளாதார சீர்திருத்தங்களை செயல்படுத்துவதை நோக்கமாகக் கொண்டிருந்தன. பல்வேறு துறைகளில் முக்கிய முடிவுகளை எடுக்கவும், பல்வேறு துறைகளில் உள்ள தடைகளை அகற்றவும் பிரதமர் கூட்டங்களை நடத்தினார்.

வழக்கமான அதிகாரிகளோடு நடக்கும் கூட்டங்கள் மற்றும் பொது ம்களை சந்திக்கும் கூட்டங்கள் இல்லாத நிலையில் பிரதமரின் பெரும்பாலான கூட்டங்கள் ஆன்லைனில் நடத்தப்பட்டன. மூத்த அதிகாரிகள் பிரதமரை கிட்டத்தட்ட 1000 மணி வேலை நேரங்களுக்கு சந்தித்தனர்.

ஒவ்வொரு கூட்டத்திலும் சராசரியாக 10 அதிகாரிகள் இரண்டு மணி நேரம் கலந்து கொண்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். கொரோனா காரணமாக வீழ்ச்சியடைந்த பொருளாதார வளர்ச்சியை அதிகரிக்க எடுக்க வேண்டிய முடிவுகள் குறித்து மூளைக்கு ஆழ்ந்த வேலை கொடுக்கும் விதமாக இந்த கூட்டங்கள் நடத்தப்பட்டன.

உள்கட்டமைப்பை உருவாக்குதல், தொழில்நுட்பத்தைப் பயன்படுத்துதல், சுகாதாரப் பாதுகாப்பு, வரிக் கொள்கை, நலத்திட்டங்களை செயல் படுத்துதல் மற்றும் பிற பிரச்சினைகள் குறித்து நரேந்திர மோடி விவாதித்தார்.

பல்வேறு துறைமுகங்களில் மீதமுள்ள நிலங்களை முறையாகப் பயன்படுத்தவும், வரி முறையில் அதிக வெளிப்படைத்தன்மையைக் கொண்டுவரவும், கிராமப்புறங்களில் ஆன்லைன் வகுப்புகளை வழிமுறைப்படுத்தவும், யுபிஐ மற்றும் டிபிடி திட்டங்களை மேலும் அதிகம் உபயோகிப்பது போன்ற பல பிரிவுகள் குறித்து மோடி நிர்ணயங்கள் எடுத்துக் கொண்டார் என்று அரசாங்க வட்டாரங்கள் தெரிவித்தன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 + fifteen =

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.