நிரம்பி வழியும் பிணவறை; வெளியிலேயே கிடத்தப்படும் உடல்கள்!

Published:

guntur government hospital - 2026
  • குண்டூர் ஜிஹெசில் மார்ச்சுவரி நிரம்பியது.
  • வெளியிலேயே உடல்கள்.

குண்டூர் ஜிஹெச் மார்ச்சுவரியில் இறந்த உடல்கள் நிரம்பி வழிந்தன. அதனால் வெளியிலேயே சடலங்கள் குவிந்துள்ளன.

குண்டூரு அரசு பொது மருத்துவமனையில் அதிர்ச்சியளிக்கும் காட்சிகள் தென்படுகின்றன. வெளியிலேயே உடல்கள் கிடப்பதால் கவலை அதிகரித்துள்ளது.

சனிக்கிழமை காலையில் இருந்து ஞாயிறு காலை 11 மணி வரை மருத்துவமனை வளாகத்தில் ஓபி வார்டு நம்பர் 14வது அறைக்கு அருகில் ஒரு உடல் கிடந்தது. மற்றும் ஒரு உடல் பொதிலி பிரசாத் மில்லினியம் பிளாக் அருகில் கிடந்தது.

நோயாளிகள் இந்தச் சடங்களின் கிடத்தல்களுக்கு இடையேதான் வந்து போய்க்கொண்டிருந்தார்கள். இவற்றை ஞாயிறன்று ஊடகத்தினர் புகைப்படம் எடுப்பதை பார்த்தபின் நிர்வாகம் எச்சரிக்கை அடைந்து உடல்களை வேறு இடத்திற்கு மாற்றினார்கள்.

அந்த இறந்த உடல்கள் யாருடையவை? கோவிட் தாக்கப்பட்டவர்களா? அல்லது சாதாரண நோயாளிகளா ? என்று தெரியவில்லை.

பரிசோதனை ரிசல்ட்கள் வெளிவருவதில் தாமதம் ஏற்படுவதால் இத்தகைய சூழ்நிலை ஏற்படுகிறது என்று குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ரிசல்ட்டுகள் வரும்வரை உடல்களை சொந்தக்காரர்களுக்கு மருத்துவ மனை ஊழியர்கள் அளிக்க மறுத்து வருகிறார்கள்.

ALSO READ:  திருத்தங்கல் பெருமாள் கோயிலில் தேரோட்டம் கோலாகலம்!

குண்டூரு மாவட்டத்தில் இதுவரை கொரோனாவால் 98 பேர் அதிகாரப்பூர்வமாக இறந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ஜிஹெச்சில் எந்த நோயால் இறந்தாலும் கோவிட் சோதனைகளின் பிறகே மருத்துவ ஊழியர்கள் உடலை அளிக்கிறார்கள்.

guntur gh - 2026

ஜிஹெச் மார்ச்சுவரி இறந்த உடல்களால் நிரம்பி வழிகிறது என்று மருத்துவமனை சூபரின்டெண்டன்ட் ப்ரொஃபெசர் கே சுதாகர் தெரிவித்தார்.

நோயாளிகளின் உதவியாளர்களுக்கு போன் செய்து தெரிவித்தாலும் உடல்களை எடுத்துச் செல்வது இல்லை என்று குற்றம்சாட்டினார். அதனால் உடல்களை எங்கே பாதுகாப்பாக வைப்பது என்று தெரியவில்லை என்ற கவலை தெரிவித்தார்.

மருத்துவமனையின் சூழ்நிலையை மாவட்ட கலெக்டர், ஜெசி பார்வைக்கு எடுத்துச் சென்றதாகவும், சிலர் மருத்துவம் செய்து கொள்வதற்கு வந்து இறந்த உடனேயே அவருடைய உற்றார் கோவிட் இருக்குமோ என்னவோ என்ற அச்சத்தால் உடல்களை அங்கேயே போட்டுவிட்டு சென்று விடுகிறார்கள் என்றும் கூறினார்.

நகத்தில் உள்ள மயானத்தில் ஒரு நாளைக்கு 4 உடல்கள் மட்டுமே தகனம் செய்யக்கூடிய வசதி உள்ளது என்றும் அதன் வசதியை அதிகரிக்க வேண்டும் என்றும் உயரதிகாரிகள் நகர ஆணையருக்கு தெரிவித்துள்ளார்கள்.

ALSO READ:  அயோத்தி ராமர் கோவில் நிதி முறைகேடு விவகாரத்தில் கடும் நடவடிக்கை தேவை: ஆர்எஸ்எஸ்.,
ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img