லக்னௌ:
லக்னௌ மெட்ரோ ரயிலின் முதல் நாள் பயணத்தின்போதே தொழில்நுட்பக் கோளாறால் கதவு அடைத்துக் கொண்டதில், பயணிகள் சுமார் 100 பேர் அவதியடைந்தனர்.
இன்று காலை 7.15 க்கு சார்பாக் பகுதியிலிருந்து டிரான்ஸ்போர்ட் நகர் வரை சென்ற மெட்ரோ ரயிலில் பயணிகள் மாட்டிக் கொண்டனர். ரயில் மாவயா நிலையம் அருகே வந்த போது திடீரென்று நின்றுவிட்டது. பயணிகள் சுமார் ஒரு மணி நேரத்திற்கும் மேல் வெளிச்சம், குளிர்சாதன வசதியின்றி திண்டாடினர்.
பின் அதிகாரிகள் வந்து பார்வையிட்டு, நெருக்கடி கால வழியை பயன்படுத்தி அனைவரையும் மீட்டனர். பின்னர் வேறொரு ரயிலில் பயணிகள் தங்கள் பயணத்தைத் தொடர்ந்தனர்.
முதல் நாளிலேயே ஏற்பட்ட தொழில்நுட்பக் கோளாறு அதிர்ச்சியை ஏற்படுத்தியது என்றாலும் பலரும் உற்சாகத்துடனேயே இருந்தனர்.



