குப்பை அள்ளும் முறத்தால் மூதாட்டியை அடிக்கும் இளம்பெண்! வைரல் வீடியோ!

இந்தியா சற்றுமுன் லைஃப் ஸ்டைல்
Beating-the-old-lady

ஒலிம்பிக் மற்றும் காமன்வெல்த் போட்டிகளில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தனது டுவிட்டரில் பதிவு செய்த வீடியோவில் வயதான பெண் ஒருவரை அவரது குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அடிக்கும் காட்சிகள் இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

மல்யுத்த வீரர் யோகேஷ்வர் தத் தனது டுவிட்டர் பக்கத்தில் ஒரு வயதான பெண்மணியை அவரது குடும்பத்தைச் சேர்ந்த இளம்பெண் ஒருவர் அடிக்கும் காட்சி கொண்ட வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஹரியானா மாநிலத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளதாக தெரிகிறது. குப்பை அள்ளும் பிளாஸ்டிக் பொருளை கொண்டு அந்தப் பெண் வயதான பெண்மணியை தலையில் ஓங்கி அடித்துள்ளார். அடி வாங்கி அந்த வயதான பெண் அழுதுகொண்டே வீட்டின் உள்ளே செல்வது போன்று அந்த வீடியோ உள்ளது

இது குறித்து காவல்துறையினர் கடுமையான நடவடிக்கை எடுத்து வயதான பெண்ணை தாக்கிய இளம் பெண் இளம் பெண்ணுக்கு தகுந்த தண்டனை அளிக்க வேண்டும் என்று யோகேஷ்வர் கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த வீடியோவை அவர் தனது டுவிட்டரில் பதிவு செய்திருக்கும் நிலையில் நெட்டிசன்கள் தங்களது கண்டனத்தை தெரிவித்து வருகின்றனர்

ALSO READ:  பட்டம் வாங்க வந்த மாணவர்களை நெகிழ்ச்சியில் ஆழ்த்திய ஆளுநர் ஆர்லேகர்!

மேலும் இந்த வீடியோவை எடுத்தவருக்கும் நெட்டிசன்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். வயதான பெண் ஒருவர் அடி வாங்கிக் கொண்டிருக்கும் போது அவரை காப்பாற்றாமல் அதனை வீடியோ எடுப்பது அவ்வளவு முக்கியமா? என்றும் அவர்கள் கண்டனம் தெரிவித்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.