modi-speech
modi-speech

தெலுங்கு மொழி தினத்தையொட்டி பிரதமர் மோடி டுவிட்டரில் வாழ்த்து தெரிவித்தார்.

பேச்சு மொழிப் புரட்சி தலைவர் கிடுகு ராமமூர்த்தியின் பிறந்தநாளை தெலுங்கு மொழி தினமாக நடத்தி வருவது வழக்கம். அதன் தொடர்பாக பல பிரமுகர்கள் தெலுங்கு மொழி தின வாழ்த்துக்கள் தெரிவித்தார்கள்.

பிரதமர் நரேந்திர மோடி ட்விட்டர் மூலம் தெலுங்கு மொழி தின கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். தெலுங்கு மொழியை முன்னேற்றுவதில் முன்னோக்கி எடுத்துச் செல்லும் அனைவருக்கும் முக்கியமாக இளைஞர்களுக்கும் யுவதிகளுக்கும் என் நன்றிகள். தன் இலக்கிய படைப்புகளாலும் தன் சமூக சீர்திருத்த கண்ணோட்டத்தாலும் பல தலைமுறைகள் மீது அழியாத முத்திரை பதித்த கிடுகு ராமமூர்த்தி அவர்களுக்கு அஞ்சலி என்று மோடி ட்விட்டரில் தெரிவித்தார்.

துணை ஜனாதிபதி முப்பவரபு வெங்கையா நாயுடுவும் தெலுங்கு மொழி தின கொண்டாட்டங்களுக்கு வாழ்த்து தெரிவித்தார். உயர்ந்த சமுதாய நிர்மாணத்திற்கு மொழியும் கலாச்சாரமும் மட்டுமே சிறந்த அஸ்திவாரம் அமைக்கும் என்று அவர் குறிப்பிட்டார். கிடுகு ராமமூர்த்தி பந்துலுவின் பிறந்த நாளான தெலுங்கு மொழி தினம் மொழி, கலாச்சாரம், சமுதாயம் ஆகியற்றில் நாம் எங்கு உள்ளோம் என்ற அம்சத்தை சுயபரிசோதனை செய்வதற்கான வாய்ப்பு என்று அவர் கூறினார்.

ALSO READ:  வாஞ்சி பிறந்த தினத்தில் ஒரு கோரிக்கை!

தாய்மொழி தினம் என்றால் உண்மையில் தன்மானத்தின் தினமாகும் என்று குறிப்பிட்ட துணை ஜனாதிபதி வெளிநாடுகளிலிருந்து கொண்டு தாய்மொழி மீது அன்போடு விளங்கும் என்ஆர்ஐ தெலுங்கு மக்களுக்கும் அதேபோல் தெலுங்கு மொழி தின கொண்டாட்டங் களுக்கு ஏற்பாடு செய்து பங்கு பெறுபவர்கள் அனைவருக்கும் பாராட்டுக்கள் என்று தெரிவித்தார்.

Leave a Reply

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.

Trending