பிரபல குச்சுபுடி டான்சர் ஷோபா நாயுடு காலமானார்!

Published:

shoba-naidu

பிரபல குச்சுபுடி டான்சர் ஷோபா நாயுடு தமது 64 ஆவது வயதில் அக்.14 இன்று காலை காலமானார்.

ஹைதராபாத்தில் ஒரு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் போது புதன்கிழமை விடியற்காலையில் ஷோபா நாயுடு மரணமடைந்தார்.

குச்சுபுடி டான்சர் ஷோபா நாயுடு 1956ல் ஆந்திராவில் அனகாபல்லியில் பிறந்தார்.

சில நாட்களுக்கு முன் வீட்டில் வழுக்கி விழுந்ததால் தலையில் பலமாக காயம் ஏற்பட்டது. உடல்நிலை பிரச்சினைகளால் அவர் கடந்த சில நாட்களாக ஹைதராபாதில் உள்ள ஒரு பிரபல மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். நிலைமை கவலைக்கிடமாக மாறி புதன்கிழமை விடியற்காலையில் ஷோபா நாயுடு காலமானார்.

சிகிச்சை பெற்று வரும் போது அவருக்கு கொரோனா வைரஸ் கூட தாக்கியதாகத் தெரிகிறது.

கடந்த சில நாட்களாக தன் மனைவி ஷோபா நாயுடு வெண்டிலேட்டர் மூலம் கொரோனா ட்ரீட்மென்ட் பெற்று வந்தார் என்று அவருடைய கணவர் ஐஏஎஸ் ஓய்வு அதிகாரி அர்ஜுன் ராவு தெரிவித்தார்.

ALSO READ:  வடகிழக்கில் ஹிந்து தேசியம் : அஸ்ஸாம்

குச்சுபுடியில் அவர் செய்த நிகழ்ச்சிகள் மற்றும் சேவைகளுக்காக ஷோபா நாயுடு பத்மஸ்ரீ அவார்டு பெற்றுள்ளார். வெம்பட்டி சின்னசத்தியம் அவர்களின் சீடராக குச்சுபுடி அகாடமியை நியமித்த ஷோபா நாயுடு கடந்த 40 ஆண்டுகளாக குச்சுபுடி வகுப்புகள் நடத்தி நாட்டியத்தில் பயிற்சி அளித்து வந்தார். பல நாடுகளில் அவருடைய சீடர்கள் உள்ளார்கள்.

ஷோபா நாயுடு பல அவார்டுகள், சன்மானங்கள் பெற்றுள்ளார்.

2001ல் பத்மஶ்ரீ, 1982 ல் சென்னையில் உள்ள கிருஷ்ண கான சபாவில் இருந்து நிருத்திய சூடாமணி, 1998 என்டிஆர் புரஸ்காரம், 1990ல் சங்கீத நாடக அகாடமி விருது, 2011ல் தங்கிரால கிருஷ்ணபிரசாத் நினைவு விருது, ஆந்திர பிரதேஷ் அரசாங்கத்திடமிருந்து ஹம்ச அவார்டு போன்ற பல விருதுகளைப் பெற்றுள்ளார்.

இவருடைய மறைவுக்கு பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

ராஜி ரகுநாதன்
ராஜி ரகுநாதன்
தமிழிலிருந்து தெலுங்கிலும் நெலுங்கிலிருந்து தமிழிலும் மொழிபெயர்ப்பு செய்து வருகிறார். சிறந்த மொழிபெயர்ப்புக்கான திருப்பூர் சக்தி விருது 2018 பெற்றுள்ளார். 30க்கும் மேற்பட்ட சிறுகதைகள் முன்னணி பத்திரிகைகளில் வெளிவந்துள்ளன. இவர் எழுதிய தாய் மண்ணே வனக்கம் என்ற சிறுகதை மங்கையர் மலர் நடத்திய சிறுகதைப் போட்டியில் பரிசு பெற்றுள்ளது. தமிழ் பத்திரிகைகளில் ஆன்மீக மற்றும் தெலுங்கு மற்றும் சமுதாய கட்டுரைகளும் கவிதைகளும் எழுதி வருகிறார். ஸ்ரீ முரளீதர ஸ்வாமிகளின் உரைகளை ஆன்மீக தமிழிலிருந்து தெலுங்கில் மொழிபெயர்த்து அளிக்கிறார். திருவெம்பாவை நூல் தெலுங்கில் ருஷிபீடம் வெளியீடாக 2013ல் வெளிவந்துள்ளது. பிரம்மஸ்ரீ சாமவேதம் ஷண்முக சர்மா அவர்களின் ‘ஏஷ தர்மஹ சனாதனஹ” என்ற தெலுங்கு நூலை ‘இது நம் சமாதன தர்மம்” என்ற பெயரில் பொழிபெயர்த்துள்ளார். தெலுங்கு பக்தி தொலைக் காட்சியிலும் ஆல் இண்டியா ரேடியோ ஹைதராபாதிலும் சமுதாய, ஆன்மீக உரைகளை ஆற்றி வருகிறார்.

Related articles

Recent articles

spot_img