ஐபிஎல் 2020., தொடரில் ‘நடப்பு சாம்பியன்’ அந்தஸ்தை மும்பை அணி தக்கவைத்துக் கொண்டது. இதை அடுத்து 5வது முறையாக ஐபிஎல் பட்டத்தை வென்றுள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி.
இன்று நடைபெற்ற பைனல்ஸில் தில்லி கேப்பிடல்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி மும்பை இந்தியன்ஸ் அணி சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.
ஐ.பி.எல்., தொடரின் 13வது சீசன் ஐக்கிய அரபு எமிரேட்சில் நடைபெற்றது. துபையில் நடைபெற்ற இறுதிப் போட்டியில், மும்பை, டில்லி அணிகள் மோதின. ‘டாஸ்’ வென்ற டில்லி அணி கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் பேட்டிங் தேர்வு செய்தார்.
டில்லி அணிக்கு ரிஷாப் பன்ட் (56), கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் (65*) அரைசதம் கடந்து கைகொடுக்க, 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 156 ரன்கள் எடுத்தது தில்லி அணி.
157 என்ற எளிய இலக்கை விரட்டிய மும்பை அணியில், கேப்டன் ரோகித் சர்மா (68), இஷான் கிஷான் (33*) ஆகியோர் நன்கு ரன்குவித்து கைகொடுக்க, 18.4 ஓவரில் 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன் எடுத்து மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெற்றது.
இதன் மூலம் 5 ஆவது முறையாக (2013, 2015, 2017, 2019, 2020) சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது