கன்னியாகுமரி மற்றும் கேரளாவை சேர்ந்த சுமார். 1500 மீனவர்கள் தங்கள் படகுகளுடன் ஓக்கி புயல் காரணமாக மகாராஷ்ரா மாநிலம் சிந்துதுர்க் மாவட்டத்தில் கரை ஒதுங்கினர் இதை அறிந்து எனது அலுவலக அதிகாரிகளிடம் மகாராஷ்ட்ரா ஆளுநர் மற்றும் முதலமைச்சர் அலுவலக அதிகாரிகளை தொடர்பு கொள்ளுமாறு உத்தரவிட்டேன்.
இதை தொடர்ந்து மாவட்ட ஆட்சியர் டில்லி அலுவலக அதிகாரியை தொடர்பு கொண்டு தேவ்காட் துறைமுகத்தில் அனைத்து மீனவர்களுக்கும் உணவு மற்றும் தங்க வைக்க ஏற்பாடு செய்வதாக கூறினர். எனது கோரிக்கையை ஏற்று மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களின் உத்தரவின்பேரில், 2 ஹெலிகாப்டர்கள் மீனவர்களை மீட்க கன்னியாகுமரி விரைந்துள்ளன. ஐஎன்எஸ் வைபவ் கப்பல் திருவனந்தபுரத்திலிருந்து 160 கிமீ தொலைவில் தேடுதல் வேட்டையை துவங்கி உள்ளது. கன்னியாகுமரி கடலுக்கு சென்று காணாமல் போன மீனவர்களில் இதுவரை 210 பேர் மீட்பு –
மாவட்ட ஆட்சியர் தகவல்…. ஆகவே கன்னியாகுமரி மாவட்ட மக்கள் பதட்டம் அடைய வேண்டாம். மத்திய அரசு அனைத்துவித உதவிகளையும் தொடர்ந்து செய்து வருகிறது. என்று தெரிவித்துள்ளார் பொன்.ராதாகிருஷ்ணன்.
மீனவர்கள் பத்திரமாக மீட்கப்படுகிறார்கள்: அச்சம் வேண்டாம் என்கிறார் பொன்.ராதாகிருஷ்ணன்
Popular Categories



