
ஆந்திரப் பிரதேசத்தில் ஹிந்து கோவில்களின் மீதான தாக்குதல்களின் வரிசை நிற்காமல் தொடர்கிறது… இருப்பினும் இப்போது புதிதாக சில சால்ஜாப்புகளை சொல்லி வருகிறது ஜெகன் அரசு. எலிகள் தள்ளி விட்டு.. சீதாதேவி விக்ரஹம் கீழே விழுந்து உடைந்தாக புதிய கதைகள் கட்டவிழ்த்து விடப் பட்டுள்ளன.
புதிதாக ராம தீர்த்தம் சம்பவத்தின் விவாதம் அடங்குவதற்கு முன்பே ஆந்திரா மாநிலத்தில் மேலும் சில இடங்களில் தெய்வ விக்கிரகங்களை சிதைப்பது தொடர்கிறது. விஜயநகரம் மாவட்டம் ராம தீர்த்தத்தில் கோதண்ட ராமர் விக்ரகம் சிரச்சேதம் நடந்த சம்பவம் மறந்து போவதற்கு முன்பாகவே ராஜமுந்திரியில் சுப்ரமணிய சுவாமி விக்ரகத்தின் இரண்டு கைகளையும் குண்டர்கள் உடைத்தார்கள்.
புதிதாக விஜயவாடாவில் மீண்டும் ஒரு சம்பவம் நிகழ்ந்துள்ளது. பண்டிட் நெஹ்ரூ பஸ் ஸ்டாண்ட் அருகிலுள்ள சீதாராம மந்திரத்தில் சீதாதேவியின் விக்கிரகத்தை அடையாளம் தெரியாத குண்டர்கள் சேதப் படுத்தி உள்ளார்கள். செய்தி அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சேர்ந்து சோதனையிட்டு வருகிறார்கள்.
இந்து கோவில்களும் சிலைகளும் தாக்குதல் சம்பவம் மீண்டும் தொடராமல் பார்த்துக் கொள்வோம் என்று அறநிலையத்துறை அமைச்சர் பெல்லம்பள்ளி ஸ்ரீநிவாஸ் வாக்களித்த 24 மணி நேரத்திற்குள்ளாகவே விஜயவாடா நடுரோட்டில் அமைச்சரின் சொந்த ஊரிலேயே சீதா தேவியின் சிலையை சேதப்படுத்தும் சம்பவம் நடந்துள்ளது கவனிக்கத்தக்கது.
இதனிடையே… வேண்டுமென்றே யாராவது இந்த வேலையை செய்துள்ளார்களா அல்லது கீழே விழுந்து உடைந்து விட்டதா என்று உள்ளூர் மக்கள் சந்தேகம் தெரிவித்துள்ளார்கள்.
இது மண்ணால் செய்யப் பட்ட சிலை என்றும் எலிகள் தள்ளிவிட்டு இருக்கும் அல்லது காற்றில் கீழே விழுந்து உடைந்து இருக்கும் என்றும் சிஐ விவரித்துள்ளார். இந்த விவரணையின் மீது சம்பவ இடத்திற்கு வந்தடைந்த தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் பட்டாபிராம் ஆத்திரம் அடைந்துள்ளார்.
விசாரிக்காமலேயே எவ்வாறு ஒரு முடிவுக்கு வந்தீர்கள் என்று கேள்வி எழுப்பினார். சிசி கேமராக்களை பரிசோதனை செய்து விசாரணை நடத்த வேண்டும் என்று அவர் டிமாண்ட் செய்தார்.
அங்கு கர்னூல் மாவட்டத்தில் கோசிகி அருகில் உள்ள மர்லபண்ட ஆஞ்சநேய சுவாமி கோவிலில் உள்ள சீதாராமர் விக்ரகங்களைக் கூட குண்டர்கள் சனிக்கிழமையன்று சேதப்படுத்திய விஷயம் தெரிந்ததே. கோவில் முகத்துவாரத்தின் இரும்பு கம்பிகளை விலக்கிவிட்டு உண்டியலை கூட தூக்கி கொண்டு போய் விட்டார்கள். ஆனால் போலீஸார் அங்குள்ள நிலைமையை தாறுமாறு செய்துவிட்டார்கள்.
விக்ரகம் துவம்சம் ஆகவில்லை என்று நிரூபிப்பதற்கு முயற்சித்தார்கள். அங்கு சென்ற நிருபர்களையும் அர்ச்சகர்களையும் நிர்பந்தப்படுத்தி அடைத்துவைத்து நள்ளிரவில் அவர்களை வெளியில் அனுப்பினார்கள் என்று பக்தர்கள் குற்றம் சுமத்துகின்றனர்.