
உலகத்தில் உள்ள மனிதர்களின் இன்பத்திற்கும் துன்பத்திற்கும் அவர்கள் செய்யும் புண்ணிய பாவ கர்மங்களின் காரணமாகின்றன. மனிதன் ஒரு கணம்கூட கர்மாக்களை செய்யாமல் இருப்பதில்லை. அவன் தன்னுடைய பூர்வஜென்ம வாசனையால் விகித கர்மாக்களையும் நிஷித்த கர்மாக்களையோ தெரிந்தோ, தெரியாமலோ வாக்காலும் மனத்தாலும் உடலாலும் செய்து கொண்டுவருகிறான். விஜித கர்மாக்களின் பலனாக சுகத்தையும் துக்கத்தையும் மனதாலும் உடலாலும் அனுபவிக்கிறான். நிஷித்த கர்மாக்களின் பலனாக துக்கத்தையும் வாக்காலும், மனத்தாலும் அனுபவிக்கிறான் இந்த சக்கரத்தை புரிந்துகொள்ளாமல் நண்பர்களால் சுகமும், பகைவர்களால் துக்கமும் ஏற்படுகிறது என்று மனிதர்கள் தவறாக நினைத்துக் கொள்கிறார்கள். இதைத்தான் சங்கர பகவத்பாதாள் “ஹேது: கர்மைவ லோகே ஸுகதிதரயோரேவமஜ்ஞோ(அ)விதித்வா மித்ரம் வா சத்ருரித்தம் வ்யவஹரதி ம்ருஷா…” என்று கூறியிருக்கிறார். ஆகையால் அவன் அவன் செய்கின்ற கர்மாக்கள் தான் அவன் அவனவன் செய்கின்ற கர்மாக்கள் தான் அவனவனின் சுகதுக்கத்திற்குக் காரணமாகிறது. கர்மாக்கள் தான் பந்தத்திற்கு காரணமாகிறது. ஆனால் அந்த கர்மாக்களை ஈஸ்வரார்பண புத்தியுடன் செய்தால் செய்தால் அது பந்தத்திற்குக் காரணமாகாது. அதைத்தான் பகவத் கீதையில் கிருஷ்ண பரமாத்மா
யஜ்ஞார்த்தாத்கர்மணோ(அ)ந்யத்ர லோகோ(அ)யம் கர்ம பந்தன: ததர்தம் கர்ம கௌந்தேய முக்தஸங்க ஸமாசர. என்று உபதேசித்திருக்கிறார் .இந்த இடத்தில் யஜ்ஞ என்பதற்கு ஈஸ்வர: என்று அர்த்தம் அதாவது எவனொருவன் அகங்காரம் இல்லாமல் ஈசுவர அர்ப்பண புத்தியுடன் விஹித கர்மாக்களைச் செய்து கொண்டு வருகிறானோ அவனுக்கு பரமாத்மாவின் கிருபையால் சித்த சுத்தி ஏற்பட்டு பரமஸ்ரேயஸ் உண்டாகிறது என்பதை இந்த ஸ்லோகத்தின் கருத்து. ஆகையால் ஸ்ரேயஸை விரும்புவர்கள் நித்திய கர்மாக்களை ஈஸ்வரார்பண புத்தியுடன் செய்து வந்து எல்லாவித நன்மைகளையும் அடையட்டும் என்று ஆசீர்வதித்திக்கிறோம். என்று மகாசன்னிதானம் ஸ்ரீ பாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் அருளுரை வழங்குகிறார்கள்.